பவர் பிளே ஓவரிலேயே டெல்லியின் கதையை முடித்த ஷமி – 12 வருடங்கள் கழித்து துல்லியமான சாதனை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்கொண்டது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் டெல்லி இந்த போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதிரடியான வேகத்தில் ஸ்விங் செய்து முதல் ஓவரை வீசிய முகமது ஷமி முதல் பந்திலேயே பில் சால்ட்டை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

அடுத்த ஓவரிலேயே கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்பின்றி அவசரப்பட்டு 2 (2) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் வந்த ரிலீ ரோசவ் 8 (6) ரன்களில் இருந்த போது முகமது ஷமி வீசிய 3வது ஓவரில் ஸ்விங் ஆகி வந்த 5வது பந்தில் எட்ஜ் கொடுத்த நிலையில் அதை விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா அபாரமாக தாவி பிடித்தார். அதனால் 16/3 என்ற திண்டாட்டமான துவக்கத்தை பெற்ற டெல்லிக்கு நங்கூரத்தை போட முயன்ற மனிஷ் பாண்டேவை மீண்டும் 5வது ஓவரை வீசிய முகமது ஷமி முதல் பந்தில் ரிதிமான் சஹாவின் அற்புதமான கேட்ச்சால் அவுட்டாக்கினர்.

- Advertisement -

மிரட்டிய ஷமி:
அத்துடன் நிற்காமல் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த இளம் வீரர் பிரியம் கார்க்கையும் எட்ஜ் கொடுக்க வைத்த அவர் அதே போல மீண்டும் ரித்திமான சஹாவின் சிறப்பான கேட்ச்சால் 10 (14) ரன்களில் அவுட்டாக்கினார். அப்படி பவர் பிளே ஓவர்களில் 3 ஓவரை வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த முகமது ஷமி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவரில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2வது பவுலராக 12 வருடங்கள் கழித்து சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளே ஓவர்களில் இசாந்த் சர்மா 12 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். அதே போல தவால் குல்கர்னி பெங்களூருவுக்கு எதிராக 8 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை எடுத்து 3வது இடத்தில் உள்ளார்.

அப்படி பவர் பிளே ஓவர்களிலேயே முக்கிய 4 விக்கெட்களை எடுத்த ஷமி கதையை முடித்ததால் 23/5 என திணறிய டெல்லி 100 ரன்களை தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்த போது 6வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் படேல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த இளம் வீரர் அமான் கான் சற்று அதிரடியாக செயல்பட்டு 3 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 51 (44) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

இதையும் படிங்க:IPL 2023 : விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு ஆப்கான் வீரர் நவீன் உல் வெளியிட்ட பதிவு – தைரியமான ஆள்தான்

அந்த சமயத்தில் களமிறங்கிய மற்றொரு இளம் வீரர் ரிபல் படேல் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு முக்கியமான 23 (13) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவர்களில் டெல்லி போராடி 130/8 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 2 விக்கெட்களையும் நடத்தினர்.

Advertisement