IPL 2023 : விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு ஆப்கான் வீரர் நவீன் உல் வெளியிட்ட பதிவு – தைரியமான ஆள்தான்

Naveen-ul-Haq
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று இரவு லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது இரு அணி வீரர்களுக்கும் இடையேயான மோதலானது சமூக வலைதளத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்திலேயே நவீன் உல் ஹக்கிற்கு எதிராக வார்த்தை போரில் ஈடுபட்டனர். பின்னர் போட்டி முடிந்தும் விராட் கோலி கௌதம் கம்பீர் மோதல், நவீன் உல் ஹக் விராட் கோலி மோதல் என நேற்றைய போட்டி பரபரப்பாகவே இருந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக லக்னோ அணியின் வீரரான நவீன் உல் ஹக்குடன் பெங்களூரு வீரர் விராட் கோலி ஈடுபட்ட மோதல் தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது லக்னோ அணி பேட்டிங் செய்யும் போது 17-வது ஓவரில் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

கோலியும், நவீனும் வாக்குவாதத்தில் ஈடுபடவே களத்தில் இருந்த நடுவர்கள் பிரச்சனையை சமரசம் செய்து வைத்தனர். பின்னர் போட்டி முடிந்த பின்னரும் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் மோதிக்கொண்டனர். இடையில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரும் மோதிக்கொண்டனர்.

- Advertisement -

இப்படி நேற்றைய போட்டிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் களத்திலேயே வீரர்கள் வார்த்தை மோதல் நடைபெற்றதால் விராட் கோலி, கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகிய மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி உடனான மோதலை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த ஸ்டோரி தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக ஆஸியை மிஞ்சி சிகரம் தொட்ட இந்தியா – இழந்த பெருமையை மீட்டெடுத்த அபாரம்

அந்த வகையில் நவீன் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : “உங்களுக்கு தகுதியானது எதுவோ கண்டிப்பாக அது உங்களுக்கு கிடைத்தே தீரும்”, அதுதான் வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார். விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மறைமுகமாக இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement