டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக ஆஸியை மிஞ்சி சிகரம் தொட்ட இந்தியா – இழந்த பெருமையை மீட்டெடுத்த அபாரம்

IND vs AUS
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7 முதல் 11 வரை 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் அந்த போட்டியில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் 2வது இடம் பிடித்த இந்தியா கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது. குறிப்பாக கடந்த முறை விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் சக்கை போடு போட்டு முதலிடம் பிடித்த இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.

எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்தியா போராட உள்ளது. முன்னதாக 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக வெற்றிப்பாதையில் நடக்க வைத்த விராட் கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சிகரம் தொட்ட இந்தியா:
இருப்பினும் உலகக் கோப்பை வென்று கொடுக்கவில்லை என்பதால் பிசிசிஐ ஒருநாள் கேப்டன்ஷிப்பை வலுக்கட்டாயமாக பறித்ததால் மனமுடைந்த அவர் கடந்த 2021 ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் தோற்று 2வது இடத்திற்கு சரிந்தது. மறுபுறம் பட் கமின்ஸ் தலைமையில் வெற்றி நடை போட்ட ஆஸ்திரேலியா உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது.

அந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இலங்கை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. அந்தத் தொடரில் 2வது போட்டியின் முடிவில் இந்தியா நம்பர் ஒன் அணியாக முன்னேறியதாக ஐசிசி இணையத்தில் காண்பிக்கப்பட்டதால் இந்திய ரசிகர்கள் அதை கொண்டாடினர்.

- Advertisement -

ஆனால் அடுத்த நாளே அது டெக்னிக்கல் தவறு என்று மன்னிப்பு கேட்ட ஐசிசி ஆஸ்திரேலியா தான் நம்பர் ஒன் அணி என்று தெளிவுபடுத்தியது. அதனால் ஒரே சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பிடித்த அணி என்ற தென்னாபிரிக்காவின் உலக சாதனையை (2016இல்) சமன் செய்யும் பொன்னான வாய்ப்பு இந்தியாவுக்கு நழுவி போனது. அந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருடாந்திர செயல்பாடுகளை கணக்கிட்டு தரவரிசையை ஐசிசி அப்டேட் செய்வது வழக்கமாகும்.

அதன் அடிப்படையில் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா டெஸ்ட் தர வரிசையில் கூடுதலாக 2 புள்ளிகளை பெற்று 121 புள்ளிகளுடன் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக மீண்டும் சிகரம் தொட்டு இழந்த இடத்தை பிடித்துள்ளது. அதை ஐசிசி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் இந்திய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். மறுபுறம் சமீப காலங்களில் சற்று தடுமாற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா 5 புள்ளிகளை இழந்து 116 புள்ளிகளுடன் 15 மாதங்களாக வகித்து வந்த முதலிடத்தை அலுவ விட்டு 2வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதையும் படிங்க:LSG vs RCB : கே.எல் ராகுலின் காயம் என்னதான் ஆச்சி. போட்டி முடிந்து முக்கிய அப்டேட் கொடுத்த – க்ருனால் பாண்டியா

அத்துடன் ஏற்கனவே டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் 3வது இடத்தில் இருப்பதால் ஒரே சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலியாவை

Advertisement