LSG vs RCB : கே.எல் ராகுலின் காயம் என்னதான் ஆச்சி. போட்டி முடிந்து முக்கிய அப்டேட் கொடுத்த – க்ருனால் பாண்டியா

Krunal-and-rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

LSG vs RCB

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் ஆரம்பத்தில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுல் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே டூப்ளிசிஸ் அடித்த பந்தை பவுண்டரி லைனில் ஓடி தடுக்க நினைத்தபோது அவரது வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஓட முடியாமல் பாதியிலேயே தரையில் சரிந்து விழுந்த கே.எல் ராகுல் வலியால் துடித்தார். அதன் பிறகு அவரால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.

KL Rahul

இதன் காரணமாக அணியின் பிசியோ மற்றும் உதவி அதிகாரிகள் என அனைவரும் ஓடி வந்து கே.எல் ராகுலை பரிசோதித்து விட்டு பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். அதன் பிறகும் போட்டி முடியும் வரை வலியிலேயே இருந்த ராகுல் 11-வது வீரராக களம் புகுந்தும் பேட்டிங் செய்ய முடியாமல் தவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் கே.எல் ராகுலின் காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து போட்டி முடிந்து லக்னோ அணியின் தற்காலிக கேப்டனான க்ருனால் பாண்டியா முக்கிய அப்டேட் ஒன்றையும் வழங்கினார். அதன்படி க்ருனால் பாண்டியா கூறுகையில் : கே.எல் ராகுலுக்கு தொடை பகுதியில் தசைப்பிடிப்பும் இடுப்பு பகுதியில் அசோகரிமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : 2008ல நானும் தப்பு பண்ணேன், குழந்தைங்க பாக்குற டிவில லெஜெண்ட் மாதிரி இருங்க, கம்பீர் – கோலிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

அவரது காயம் எந்த அளவிற்கு மோசமானதாக உள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும் அவருடைய ஸ்கேனுக்கு பிறகு மருத்துவ நிர்வாகிகள் அது குறித்த அதிகாரவப்பூர்வ தகவலை வெளியிடுவார்கள் என்றும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கக் கூடாது என்றும் தான் வேண்டுவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement