IPL 2023 : 2008ல நானும் தப்பு பண்ணேன், குழந்தைங்க பாக்குற டிவில லெஜெண்ட் மாதிரி இருங்க, கம்பீர் – கோலிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

Virat Kohli Gambhir.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் கடைசி நேரத்தில் லக்னோ அணியின் வெற்றிக்காக போராடிய ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் கோபத்துடன் ரன் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியடைந்த நவீன்-உல்-ஹக் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலி ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து தடுத்தனர்.

இருப்பினும் போட்டியின் முடிவில் கை கொடுத்த போது விராட் கோலி ஏதோ சொன்னதால் கோபமடைந்த நவீன்-உல்-ஹக் மீண்டும் வாக்குவாதம் செய்த ஏற்பட்டதை கிளன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். அதை விட அவை அனைத்தையும் பெவிலியனிலிருந்து பார்த்த லக்னோ அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது அணி வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலிக்கு தனது ஸ்டைலில் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் வகையில் சண்டையில் ஈடுபட்ட போது கேஎல் ராகுல், ஆவேஷ் கான் போன்ற இரு அணியினரை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

குழந்தைகள் பாக்குறாங்க:
இறுதியில் கேப்டன் கேஎல் ராகுல் சமாதானம் செய்ததால் பகையை மறந்து கை கொடுக்க வந்த விராட் கோலியிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்து நவீன் சென்றது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்படி மெகா சண்டையில் ஈடுபட்ட விராட் கோலிக்கு 100% அபராதமும் கம்பீர் மற்றும் நவீன் ஆகியோருக்கு தலா 50% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதை விட டெல்லியில் பிறந்து இந்தியாவுக்காக 2011 உலக கோப்பை உட்பட பல போட்டிகளில் ஒன்றாக விளையாடிய விராட் கோலியிடம் 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் இதே போல சண்டை போட்டதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின்பும் சம்பந்தமின்றி விராட் கோலி விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள கௌதம் கம்பீர் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் இப்படி மோதியது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் விராட் கோலியுடன் உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து உத்திரபிரதேசத்தின் ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கௌதம் கம்பீர் இப்படி சண்டை போட்டது ஏமாற்றமளிப்பதாக ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஜாம்பவான்கள் போல நடந்து கொள்ளுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்ளும் ஹர்பஜன் 2008இல் ஸ்ரீ சாந்த் கன்னத்தில் அடித்ததை நினைத்து இப்போதும் வருந்துவதாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் மிகப்பெரிய வீரனான நீங்கள் யாரிடமும் இப்படி சண்டை போட எந்த அவசியமும் இல்லை. இதற்கான தேவை என்ன? இருப்பினும் வெற்றிக்காக வெறித்தனமாக போராடும் குணத்தை அவர் கொண்டுள்ளதால் இவ்வாறு நடக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் உங்களை குற்றம் சாட்டுவார்கள். ஆனால் இது கிரிக்கெட்டுக்கு நல்ல விளம்பரம் கிடையாது. கம்பீரும் உத்திரபிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். என்னுடைய இந்த 2 சகோதரர்களும் உபயோகமில்லாதவர்க்கு மோதிக் கொள்ளக்கூடாது”

இதையும் படிங்க:IPL 2023 : அதை அவர் சொல்லட்டும் நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க, கவாஸ்கர் கருத்துக்கு பவுச்சர் பதிலடி – நடந்தது என்ன

“குறிப்பாக குழந்தைகள் பார்க்கும் இந்த போட்டியின் தூதர்களாக இருக்கும் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இல்லாத இந்த செயல்களில் ஈடுபடக் கூடாது. எனவே என்னுடைய 2 சகோதரர்களும் இதை மறந்து விரைவில் கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த சண்டை இதோடு நிற்காமல் ஏன் எதற்காக நடந்தது என்று காலம் கடந்து பேசுவார்கள். ஒரு வீரராக நானும் 2008இல் ஸ்ரீசாந்துடன் இது போன்ற சண்டையில் ஈடுபட்டேன். ஆனால் 15 வருடங்கள் கழித்தும் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அந்த சமயத்தில் நான் நான் மிகவும் தவறாக நடந்து கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement