IPL 2023 : அதை அவர் சொல்லட்டும் நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க, கவாஸ்கர் கருத்துக்கு பவுச்சர் பதிலடி – நடந்தது என்ன

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 8 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தவிக்கிறது. கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்து அந்த அணி இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினாலும் பந்து வீச்சில் பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் இதர பவுலர்கள் வெற்றி பறிபோகும் அளவுக்கு ரன்களை வாரி வழங்குகிறார்கள்.

Rohit

- Advertisement -

அதே போல் பேட்டிங்கில் இஷான் கிசான், சூரியகுமார் யாதவ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பெரிய ரன்களை எடுக்க தவறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ரோகித் சர்மா இந்த சீசனில் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் முன்னின்று அதிரடி காட்டாமால் ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். அதனால் தற்போதைய நிலைமையில் அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்தால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் மும்பை விளையாடி வருகிறது.

பவுச்சர் பதிலடி:
ஆனால் அதற்கு மெடிக்கல் மிராக்கள் தான் நிகழ வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கில் தடுமாறி வரும் ரோகித் சர்மா வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்காக புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக தற்போதைக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். குறிப்பாக கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தவித்து வரும் அவர் சில போட்டிகளில் நிம்மதி பெருமூச்சு விட்டு வேண்டுமானால் கடைசி சில போட்டிகளில் விளையாடலாம் என்று தெரிவித்த சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு இந்திய ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

Sunil Gavaskar

இந்நிலையில் ஓய்வு தேவைப்பட்டால் அதை நிச்சயம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார். இருப்பினும் தற்போதைக்கு புள்ளி பட்டியலில் தடுமாறும் தங்களது அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப ரோகித் சர்மா விளையாடுவது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே ரோகித் சர்மா கேட்டால் மட்டுமே ஓய்வு தருவோம் என்று கூறும் அவர் சுனில் கவாஸ்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதைப் பற்றி முடிவெடுப்பது என்னுடைய கையிலும் இல்லை. இருப்பினும் மிகச் சிறந்த வீரர் மற்றும் கேப்டனாக கருதப்படும் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம். எனவே எனக்கு ஓய்வு தேவை என்று ரோகித் சர்மா எங்களிடம் வந்து சொன்னால் மட்டுமே நாங்கள் அதை நிச்சயமாக கருத்தில் எடுத்துக் கொண்டு தேவையான முடிவை எடுப்போம். ஆனால் இதுவரை அவர் எங்களிடம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. எனவே தற்போதைக்கு அவர் எங்களுடைய அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்” என்று கூறினார்.

Mark-Boucher

அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுமாரான டெத் பவுலிங் பற்றி அவர் மேலும் பேசியதற்கு பின்வருமாறு. “இந்த சீசனில் முதல் போட்டியிலேயே அதை சரி செய்வதற்கு நாங்கள் முயற்சித்த போது மீண்டும் அதே பகுதியில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே அதை சரி செய்ய வேண்டியது எங்களுடைய வேலையாகும். அதைப்பற்றி அணி மீட்டிங்கில் அதற்காக என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று விவாதித்துள்ளோம்” என கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : ருதுராஜ், ஜடேஜால்லாம் செட்டகாது – தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே’வை வழி நடத்த சரியானவர் – வாசிம் அக்ரம் பேட்டி

இதிலிருந்து ஏற்கனவே 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா எந்த ஓய்வும் எடுக்காமல் தொடர்ந்து மும்பைக்காக விளையாடுவார் என்பது தெரிய வருகிறது.

Advertisement