IPL 2023 : ருதுராஜ், ஜடேஜால்லாம் செட்டகாது – தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே’வை வழி நடத்த சரியானவர் – வாசிம் அக்ரம் பேட்டி

Wasim Akram
- Advertisement -

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தோனி தலைமையிலான சென்னை இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் இப்போது வரை தொடர்ந்து சென்னை அணியை மிகச்சிறப்பாக வெளிநாடுத்தி வரும் கேப்டன் தோனி இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்தது போலவே 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

Ravindra Jaddeja MS Dhoni

- Advertisement -

இருப்பினும் 41 வயதாகி விட்ட அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அழுத்தத்தால் மொத்தமாக சொதப்பிய ஜடேஜா பிளே ஆஃப் சுற்று பறிபோக காரணமாக அமைந்து இறுதியில் அந்த பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து விட்டார்.

வாசிம் அக்ரம் கருத்து:
அந்த நிலையில் தல என்று தன்னை கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீதிருக்கும் பாசத்தால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என தோனி தெரிவித்திருந்த நிலையில் 2019க்குப்பின் தற்போது 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் ஏற்கனவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அவர் விரைவில் 42 வயதை தொடுவதால் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஜடேஜா கேப்டனாக செயல்படுவதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பது நிரூபணமான நிலையில் பென் ஸ்டோக்ஸ் பெஞ்சில் அமர்ந்திருப்பதுடன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதால் முழுமையாக விளையாட மாட்டேன் என ஏற்கனவே அறிவித்து விட்டார்.

Dhoni-and-Rahane

எனவே உள்ளூர் தொடரில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்டு இளமையும் பேட்டிங்கில் அசத்தும் திறமையும் கொண்ட ருதுராஜ் கைக்வாட் அடுத்த கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகளும் நிறைய முன்னாள் வீரர்களின் ஆதரவும் காணப்படுகின்றது. இருப்பினும் ருதுராஜ் பெரிய அளவில் அனுபவத்தை கொண்டிராத நிலையில் இந்த வருடம் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வரும் அஜிங்க்ய ரகானே சென்னையின் அடுத்த கேப்டனாக செயல்படுவதற்கு மிகவும் சரியானவர் தகுதியானவர் என்று முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் 2022 தொடரில் அவர்கள் ஜடேஜாவை வைத்து முயற்சித்தார்கள். ஆனால் அது அவருடைய சொந்த செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது அவர்கள் கேப்டனை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரகானேவை தவிர்த்து அவர்களுக்கு வேறு நல்ல கேப்டன் கிடைக்க மாட்டார்கள். ஏனெனில் உள்ளூர் இந்திய வீரரான அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் திறமையை கொண்டவர். அத்துடன் பொதுவாகவே ஐபிஎல் தொடரில் உள்ளூர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதை நாம் பார்த்து வருகிறோம்”

“மறுபுறம் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் இருக்கும் ஊர்களின் பெயர் கூட சரியாக நினைவில் இருக்காது. அப்படி இருக்கும் போது அவர்களால் எப்படி உங்களுடைய அணியை சிறப்பாக வழி நடத்த முடியும். எனவே தோனி ஓய்வு பெற்ற பின் சென்னையை வழி நடத்துவதற்கு ரகானே மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். இது பற்றி சென்னை பிரத்தியேக திட்டத்தை வைத்திருக்கலாம். மேலும் சென்னை அணியின் கலாச்சாரத்தை மையப்படுத்தி ஸ்டீபன் பிளமிங் எடுக்க போகும் இது பற்றிய முடிவை அவர்கள் முழுமையாக நம்பலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : சின்னசாமி மைதானத்தில் மிரட்டிய கம்பீருக்கு லக்னோவில் பதிலடி கொடுத்து பழி தீர்த்த கிங் கோலி – விவரம் இதோ

அவர் கூறுவது போல ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரகானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி இல்லாத போது இந்தியாவை அபாரமாக வழி நடத்தி ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் உள்ளூர் அளவில் மும்பையின் கேப்டனாக செயல்பட்டு வரும் அனுபவத்தைக் கொண்ட அவரும் தோனியை போலவே கூலாக இருக்கும் குணத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement