இந்தாங்க ஃப்ரீ விக்கெட், நேபாளுக்கு விக்கெட்டை பரிசளித்த ரிஸ்வான் – கடுப்பாகி தொப்பியை வீசிய பாபர் அசாம்

Mohamme dRizwan Run Out
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதின. கடைசியாக கடந்த 2008இல் தங்களுடைய ஊரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடந்த போதிலும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய போட்டியை காண குறைவான பாகிஸ்தான் ரசிகர்களே வருகை தந்திருந்தனர்.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு பக்கார் ஜமான் 14 (20) ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் நேபாள் வீரர் ரோகித் பௌடலின் சிறப்பான ரன் அவுட்டால் 5 (14) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 25/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினர்.

- Advertisement -

ஃப்ரீ விக்கெட்:
குறிப்பாக பாகிஸ்தான் பேட்டிங் துறையின் இரு துருவங்களாக கருதப்படும் அவர்களில் இருவருமே நிதானம் கலந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். ஆனால் அப்போது சந்தீப் லமிசன்னே வீசிய 24வது ஓவரின் 4வது பந்தில் மிகவும் அருகிலேயே அடித்த முகமது ரிஸ்வான் வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார். இருப்பினும் அதற்குள் பந்தை எடுத்த நேபாள் வீரர் திபேந்திரா சிங் மிகவும் சரியாக ஸ்டம்பை பார்த்து அடித்தார்.

அப்போது வெள்ளை கோட்டை நெருங்கிய ரிஸ்வான் தம்முடைய உடலுக்கு மிகவும் நெருக்கமாக பந்து வந்ததை அறிந்து அதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடியவாக்கிலேயே தம்முடைய உடலையும் பேட்டையும் சற்றே பின்னோக்கி இழுத்தார். ஆனால் தமது உடலில் அடி வாங்கக்கூடாது என்பதில் அவர் அக்கறை காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே சென்ற பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அதனால் பந்தை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அவர் பேட்டை தன்னுடைய காலையும் வெள்ளை கோட்டில் தொடுவதற்கு தவறியதால் பரிதாபமாக ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ஒருவேளை அந்த சமயத்தில் பந்து வருவதை பற்றி கவலைப்படாமல் தம்முடைய விக்கெட்டை காப்பாற்றுவதற்காக வெள்ளைக்கோட்டை தொட வேண்டும் என்பதில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயமாக அவுட்டாகியிருக்க மாட்டார். இருப்பினும் அதை செய்ய தவறிய அவர் நேபாளுக்கு இலவசமாக விக்கெட்டை கொடுத்தது போல் 44 (50) ரன்களில் ஏமாற்றுத்துடன் அவுட்டாகி சென்றார். அதனால் கடுப்பான பாபர் அசாம் தம்முடைய தலையில் இருந்த தொப்பியை கழற்றி தரையில் வீசி கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: வீடியோ : இந்தாங்க ஃப்ரீ விக்கெட், நேபாளுக்கு விக்கெட்டை பரிசளித்த ரிஸ்வான் – கடுப்பாகி தொப்பியை வீசிய பாபர் அசாம்

அதை தொடர்ந்து வந்த சல்மான் ஆகா 5 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தி வரும் பாபர் அசாம் 98* ரன்கள் அடித்து பெரிய ஸ்கோர் எடுக்க போராடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக இப்திகார் அதிரடியாக விளையாடுவதால் பாகிஸ்தான் 40.3 ஓவர்களில் 217/4 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement