கிரிக்கெட்டில் எனக்கு பிடிச்ச பார்மேட் இதுதான். இதில் விளையாடவே எனக்கு விருப்பம் – விராட் கோலி கருத்து

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி நவீன மாடர்ன் டே கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரராக செயல்பட காத்திருக்கிறார்.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது தான் தனக்கு பிடித்த பார்மெட் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதை நான் மிகவும் விரும்பி செய்து வருகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் உங்களுடைய திறன்கள் முழுவதுமாக சோதிக்கப்படும்.

- Advertisement -

அதாவது உங்களது டெக்னிக், நிதானம், கவனம் சிதறாமல் விளையாடுவது, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் விளையாடுவது, வெவ்வேறு அணிகளுக்கு எதிராக வெவ்வேறு இடங்களில் விளையாடுவது என அனைத்துமே சோதிக்கப்படும். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த ஃபார்மேட்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் முழு திறமை உடையவரா? என்று சோதிக்கப்படுவார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தான் நம்மிடம் இருக்கும் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவரும். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ள சவால்களை எதிர்த்து விளையாடுவதையே நான் விருப்பமாக கொண்டுள்ளேன்.

- Advertisement -

அதோடு எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்போது அது கூடுதல் மகிழ்ச்சி தரும். எப்பொழுதுமே நான் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னால் முடிந்த அளவு இந்திய அணி வெற்றி கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடனே விளையாடி வருகிறேன். அதன் காரணமாகவே எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எனது பேட்டிங்கின் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறேன்.

இதையும் படிங்க : கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இடையே தற்செயலாக நடைபெற்றுள்ள – 4 ஒரேமாதியான நிகழ்வுகள்

இனியும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் மகிழ்ச்சியுடன் விளையாடி இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுதர விரும்புகிறேன் என விராட் கோலி கூறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை கிட்டத்தட்ட 13,000 ரன்களை நெருங்கி வரும் விராட் கோலி 66 ரன்கள் சராசரியுடன் 46 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement