வீடியோ : கடவுள் ஆசிர்வாதம் எப்போவும் இருக்கும் அடிச்சு தூள் கிளப்பு – மும்பை போட்டிக்கு முன் தல தோனியை வாழ்த்திய சீக்கா

Krish Srikkanth
- Advertisement -

கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் குஜராத்திடம் தோற்றாலும் 2வது போட்டியில் லக்னோவை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக 2019க்குப்பின் தனது கோட்டையான சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான 2வது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த போட்டியில் ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, ராயுடு உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை குவித்து 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுக்க உதவினர். குறிப்பாக கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி அதிவேகமாக வீசக்கூடிய மார்க் வுட் பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களைப் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து 12 ரன்கள் விளாசி தம்முடன் பிறந்த ஃபினிஷிங் ஸ்டைல் எப்போதும் தம்மை விட்டு போகாது என்பதை நிரூபித்தார். இறுதியில் 4 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை மாற்றிய மொயின் அலி உதவியுடன் 12 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த சென்னையின் வெற்றியில் தோனி அடித்த அந்த 2 சிக்ஸர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

கடவுள் ஆசிர்வாதம்:
அப்படி 41 வயதிலும் தனது அணிக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் தோனி பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகள் பெற்று வருகிறார். குறிப்பாக அந்தப் போட்டியில் 5000 ரன்களை கடந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகிய 2 அற்புதமான சாதனைகளை படைத்தார். அதனால் பொதுவாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் பெரிய ரன்களை குவிப்பார்கள் என்ற நிலைமையில் மிடில் ஆர்டரில் விளையாடி தோனியை போல் இவ்வளவு ரன்களை வேறு யாரும் எடுக்க முடியாது என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மனதார பாராட்டினார்.

இதை தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதி பரம எதிரியான மும்பைக்கு எதிராக நடைபெறும் தன்னுடைய 3வது போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை அணியினர் அப்போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்திற்கு நேற்று விமானம் வாயிலாக சென்றனர். அங்கே அவர்களை வரவேற்பதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மத்தியில் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் ஆளாக காத்திருந்து வரவேற்றார். அவருடன் மற்றொரு முன்னாள் வீரர் முரளி விஜயும் சென்னை அணியினரை வரவேற்றார்.

- Advertisement -

அதில் சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை ஸ்ரீகாந்த் வரவேற்ற நிலையில் அவரையும் தனது முன்னாள் ஓப்பனிங் பார்ட்னர் மைக் ஹசியை முரளி விஜய் பாசத்துடன் வரவேற்று நல்ல விசாரித்தார். அத்துடன் ட்வயன் ப்ராவோவை வரவேற்ற முரளி விஜய் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய அவரது அம்மாவுக்கு தமது சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதை தொடர்ந்து வந்த தோனி “என்ன நீங்கள் வருகிறீர்கள் போகிறீர்கள். இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று ஸ்ரீகாந்திடம் கலகலப்பாக பேசினார்.

அதற்கு “நான் நீங்கள் விளையாடும் போட்டிகளில் கமெண்ட்ரி செய்கிறேன். இதுவரை நீங்கள் அடித்த சிக்சர்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து வர்ணனை செய்தேன். அதற்காக உங்களுக்கு எனக்கு சல்யூட் செய்கிறேன். உண்மையாகவே எனது மனதார மகிழ்ச்சியடைந்து சொல்கிறேன் உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்” என்று தோனியின் தலை மீது கை வைத்து தனக்கே உரித்தான பாணியில் வாழ்த்தையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார். கடந்த 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை அப்போதைய தேர்வுக்குழு தலைவராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியுடன் இணைந்து தேர்வு செய்த பெருமைக்குரியவர்.

இதையும் படிங்க:IPL 2023 : நியூஸிலாந்தின் கனவில் விழுந்த பெரிய இடி, கேன் வில்லியம்சன் காயத்தால் ரசிகர்கள் சோகம் – காரணம் இதோ

அந்த வகையில் ஆரம்ப காலம் முதலே தோனியுடன் நல்ல புரிதல் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் அடுத்ததாக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பையை அடித்து தூள் கிளப்புங்கள் என்ற எண்ணத்துடன் ஆசீர்வதித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமீப காலங்களாகவே மும்பையிடம் சரணடைந்து தடுமாற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் சென்னை இம்முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement