வீடியோ : இதை வெச்சே அடுத்த 10 மேட்ச்ல சீட் கன்பார்ம் பண்ணிடுவிங்களே, கேஎல் ராகுல் செயலால் ரசிகர்கள் கலகலப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 50 ரன்கள் ஓபனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட டேவிட் வார்னர் 15 ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 18, ஸ்டீவ் ஸ்மித் 0 என உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அடுத்தடுத்த ஓவர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின் அவுட்டாக்கினார்.

அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று அரை சதம் கடந்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவஜாவை 12 பவுண்டரி 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்திருந்த போது ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் தடுமாறிய ஆஸ்திரேலியாவை பீட்டர் ஹேண்ட்ஸகோம்ப் நங்கூரமாக நிலைத்து நின்று 72* ரன்கள் குவித்து மீட்டெடுக்க போராடினார். ஆனால் அவரை நிற்க வைத்து விட்டு அலெஸ் கேரி 0, பட் கமின்ஸ் 33 என எதிர்ப்புறம் அந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு அவுட்டாக்கியது.

- Advertisement -

இதே வெச்சே:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் சாய்த்தனர். முன்னதாக இப்போட்டியில் 81 ரன்கள் குவித்து பெரிய சவாலை கொடுத்த உஸ்மான் கவாஜா 125 பந்துகளை எதிர்கொண்டு நன்கு செட்டிலான தைரியத்தில் அடிக்கடி ஸ்வீப் ஷாட்களை அடிக்கத் துவங்கினார். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா வீசிய 46வது ஓவரின் 5வது பந்தில் எதிர்கொண்ட அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து பவுண்டரியை பறக்க விட முயற்சித்தார்.

ஆனால் அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கேஎல் ராகுல் காத்திருந்து பந்தை உன்னிப்பாக கவனித்து அதன் கோணத்திலேயே தாவி ஒற்றை கையால் பிடித்து அபாரமான கேட்ச் பிடித்தார். அதனால் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரசிகர்களை கவர்ந்த அவர் ஏற்கனவே டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சையும் கிட்டத்தட்ட இதே போல தாவி பிடித்து சிறப்பாக ஃபீல்டிங் செய்தார். அதனால் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்த அவரை மனதிற்குள் ஒரு பயத்தை வைத்துக் கொண்டே ரசிகர்கள் பாராட்டிகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் ஆரம்பத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்த அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தடவலாக செயல்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச தொடரில் இந்தியாவை வழி நடத்திய அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதனால் உலகிலேயே இதர 10 வீரர்கள் இணைந்து சிறப்பாக செயல்பட்டு கேப்டன் பெயரில் முதல் வெற்றியை பதிவு செய்து ராகுல் கையில் கோப்பையை பெற்றுக் கொடுத்ததாக ரசிகர்கள் கலாய்த்தனர்.

அப்படி சமீப காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் எதுவுமே செய்யாமல் தொடர்ந்து துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு பெற்று வரும் அவர் இப்போட்டியில் இந்த அபார கேட்ச் பிடித்துள்ளதால் இதை வைத்தே அடுத்த 10 போட்டிகளில் வாய்ப்பு பெற்று விடுவார் என்று ரசிகர்கள் மீண்டும் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க: அடுத்த சேவாக், சச்சினா வருவார்னு பாத்தா இவர் அவர மாதிரி ஆகிட்டாரே – பிரிதிவி ஷா மீது ரசிகர்கள் அதிருப்தி, காரணம் இதோ

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 21/0 ரன்களுடன் விளையாடி வருகிறது. களத்தில் 13* ரன்களுடன் இருக்கும் ரோஹித் சர்மாவுடன் 4* ரன்கள் எடுத்து விளையாடி வரும் ராகுல் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க பெரிய ரன்களை குவிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

Advertisement