வீடியோ : சூப்பர் கேட்ச் பிடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இடத்தை உறுதி செய்தாரா ராகுல்? பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா

KL Rahul Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. மேலும் இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் கோப்பைகாக பலப்பரீட்சை நடத்த இந்தியா தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் 17ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்தியாவை வழி நடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய முகமது சிராஜ் தன்னை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்து இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம் கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து அரை சதம் விளாசினார்.

- Advertisement -

அசத்தும் இந்தியா:
இருப்பினும் அப்போது 13வது ஓவரை வீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் 3வது பந்தை பவுண்டரி அடிக்கும் முயற்சித்த ஸ்டீவ் ஸ்மித் தவறாக கணித்து எட்ஜ் கொடுத்தார். அதிரடியான வேகத்தில் முதல் ஸ்லிப் பகுதி நோக்கி சென்று அந்த பந்தை விக்கெட் கீப்பராக செயல்படும் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக தாவி கேட்ச் பிடித்தார். சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்து மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் விளையாடும் விக்கெட் கீப்பர் இடத்தில் விளையாடி வரும் அவர் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் எளிதான கேட்ச் விட்டது 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த நிலையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் அவர் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் இடத்தில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் இந்திய மைதானங்களிலேயே சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு பதிலாக ஏற்கனவே இங்கிலாந்தில் 2 சதங்களை அடித்துள்ள கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக், சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டனர்.

- Advertisement -

இருப்பினும் இங்கிலாந்தில் பந்து தாறுமாறாக ஸ்விங் ஆகும் போது அதை கச்சிதமாக பிடிப்பது விக்கெட் கீப்பர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதால் அனுபவமில்லாத ராகுல் ஃபைனலில் விளையாடக்கூடாது என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த நிலையில் இப்போது சிறந்த கேட்ச் பிடித்த அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட தகுதியான செயல்பாடுகளை நிரூபிப்பதாக கேஎல் ராகுல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

அதனால் ஏற்கனவே இந்திய அணி நிர்வாகத்தின் ஆதரவை பெற்றுள்ள ராகுல் இத்தொடரில் இதே போல நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஃபைனலில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அதை செஞ்சு என்னோட உலக சாதனையை உடைத்தால் முத்தம் கொடுத்து பாராட்டுறேன் – உம்ரானுக்கு அக்தர் ஓப்பன் அட்வைஸ்

அப்படி ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களில் அவுட்டான பின் மார்னஸ் லபுஸ்ஷேன் 15, ஜோஸ் இங்கிலிஷ் 26, கேமரூன் கிரீன் 12, கிளன் மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டோனிஸ் 5 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஷமி, ஜடேஜா போன்ற இந்திய பவுலர்கள் சொற்ப ரன்களில் காலி செய்தனர். அதனால் 35.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement