110 மீட்டர் முரட்டு சிக்சரை பறக்க விட்ட பொல்லார்ட் – அமெரிக்க தொடரில் நூலிழையில் மும்பையின் எம்ஐ தப்பியது எப்படி?

Pollard
- Advertisement -

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முக்கியமான கடைசி போட்டி ஜூலை 26ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.00 மணிக்கு நார்த் கரோலினா நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் மற்றும் சீட்டல் ஆர்க்கஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் வெல்லும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சீட்டல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ அணிக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீர ஜஹாங்கீர் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 (14) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் மோனக் பட்டேல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2 ரன்களில் நடையை கட்டினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ஹமத் அசாம் 2 (5) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 65/3 என ஆரம்பத்திலேயே எம்ஐ அணி தடுமாறியது.

- Advertisement -

நூலிழையில் தப்பிய எம்ஐ:
அந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரங்கள் நிக்கோலஸ் பூரான் மற்றும் கேப்டன் கைரன் பொல்லார்ட் ஆகியோர் பொறுப்பாகவும் சரவெடியாகவும் விளையாடி விரைவாக ரன்களை குவித்தனர். அதில் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல அதிரடியாக விளையாடி முதல் ஆளாக அரை சதமடித்த நிலையில் கேனன் வீசிய 12வது ஓவரின் 2வது பந்தில் மைதானத்தை தாண்டி வெளியே சென்று காட்டுக்குள் விழும் அளவுக்கு 110 மீட்டர் காட்டடி சிக்ஸரை பறக்கவிட்ட பொல்லார்ட் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து அசத்திய இந்த ஜோடியில் பூரான் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 68 (34) ரன்களும் பொல்லார்ட் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (18) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். கடைசியில் டிம் டேவிட் 18 (16) டேவிட் வீஸ் 19 (13) ட்ரெண்ட் போல்ட் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20* (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் எம்ஐ 194/8 ரன்கள் எடுக்க சீட்டல் சார்பில் அதிகபட்சமாக இமாம் வாசிம் மற்றும் ஹார்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 195 ரன்களை துரத்திய சீட்டல் அணிக்கு குயின்டன் டீ காக் 9 (10) ரன்களில் அவுட்டாக ஸ்னேகான் ஜெயசூர்யா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்த நிலையில் நிலையில் அவருடன் மற்றொரு தொடக்க வீரர் நௌமன் அன்வர் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 3 சிக்சருடன் 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 51 (30) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடர்ந்து க்ளாஸென் அதிரடியாக விளையாடி அரை சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் ராஜனே 7 (5) தசுன் சனாக்கா 10 (12) பிரிட்டோரியாஸ் 2 (3) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அதிரடியாக விளையாடிய க்ளாஸென் 9 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 110* (44) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரிலேயே 195/8 ரன்கள் எடுத்த சீட்டல் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் என்றதால் எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : ஒரே ஓவரில் 26 ரன்கள், ரசித் கானை அடித்து நொறுக்கிய மாஸ் சதமடித்த க்ளாஸென் – சூப்பர் கிங்ஸை காப்பாற்றியது எப்படி

இந்த வெற்றியால் லீக் சுற்றில் முடிவில் 5 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த சீட்டல் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் 5 போட்டிகளில் போராடி 3வது தோல்வியை பதிவு செய்த எம்ஐ 4 புள்ளிகளுடன் கூடுதல் ரன் ரேட் (+1.004) பெற்ற காரணத்தால் நூலிழையில் அதே 4 புள்ளிகளை கொண்டுள்ள சான் பிரான்சிஸ்கோ அணியை (-0.303) 5வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement