ஒரே ஓவரில் 26 ரன்கள், ரசித் கானை அடித்து நொறுக்கிய மாஸ் சதமடித்த க்ளாஸென் – சூப்பர் கிங்ஸை காப்பாற்றியது எப்படி

- Advertisement -

அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜூலை 26ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு துவங்கிய கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சீட்டல் ஆர்க்கஸ் அணி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நிர்வகிக்கும் எம்ஐ அணியை எதிர்கொண்டது. நார்த் கரோலினாவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சீட்டல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 194/8 ரன்கள் குவித்தது.

ஜஹாங்கீர் 19, மோனக் படேல் 2, ஹமத் அசாம் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 65/3 என தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 3 பவுண்டரி 7 சிக்சருடன் 68 (34) ரன்களும் கேப்டன் கைரன் பொல்லார்ட் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (18) ரன்களும் எடுத்து சரிவை சரி செய்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டிம் டேவிட் 18 (16) டேவிட் வீஸ் 19 (13) ட்ரெண்ட் போல்ட் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20* (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

நொறுக்கிய க்ளாஸென்:
அதை தொடர்ந்து 195 ரன்களை துரத்திய சீட்டில் அணிக்கு குயின்டன் டீ காக்’கை 9 (10) ரன்களில் அவுட்டாக்கிய உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கான் அடுத்ததாக வந்த சினேகன் ஜெயசூர்யாவையும் டக் அவுட் செய்து மிரட்டினார். அதனால் 37/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்.

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் நௌமன் அலி 6 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (30) ரன்கள் குவித்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அரை சதமடித்து வெற்றிக்கு போராடிய க்ளாஸென் 16வது ஓவரில் ரசித் கான் வீசிய முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

அத்துடன் நிற்காத அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானை அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து 5வது பந்தில் மீண்டும் பிரமாதமான சிக்சரை பறக்க விட்டு மொத்தம் 26 ரன்களை அடித்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அந்த வகையில் அவர் வெற்றிக்கு போராடிய போதிலும் எதிர்புறம் ரஜானே 7 (5) தசுன் சனாகா 10 (12) பிரிடோரியஸ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

ஆனாலும் தொடர்ந்து அதிரடியை கைவிடாத க்ளாஸென் வெறும் 41 பந்துகளில் சதமடித்து 9 பவுண்டரி 7 சிக்சருடன் 250.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 110* (44) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவர்களிலேயே 195/8 ரன்கள் எடுத்த சீட்டல் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற காரணத்தால் எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

இந்த வெற்றிக்கு சதமடித்த க்ளாஸென் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதை விட இந்த வெற்றியால் லீக் சுற்றின் முடிவில் 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சீட்டல் அணி ஜூலை 28இல் நடக்கும் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மறுபுறம் போராடி தோற்ற எம்ஐ 4 புள்ளிகளுடன் கூடுதல் ரன்ரேட் (+1.004) பெற்று சான் பிரான்ஸில்க்கோவை பின்னுக்கு தள்ளி 4வது அணியாக எலிமினேட்டர் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

இதையும் படிங்க:வீடியோ : ஒரே ஓவரில் 26 ரன்கள், ரசித் கானை அடித்து நொறுக்கிய மாஸ் சதமடித்த க்ளாஸென் – சூப்பர் கிங்ஸை காப்பாற்றியது எப்படி

ஒருவேளை எம்ஐ வென்றிருந்தால் 2வது இடத்தில் 6 புள்ளிகளுடன் குறைவான ரன் ரேட்டை (+0.570) கொண்டுள்ள சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் அணியை பின்னுக்கு தள்ளியிருக்கும். இருப்பினும் அதை தடுத்த க்ளாஸென் டெக்சாஸ் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement