என்னையா டீம்ல எடுக்க மாட்றீங்க. 40 பந்தில் 101 அடித்து வெறித்தனம் காட்டிய வீரர் – விராட் கோலிக்கு மறைமுக சிக்னல்

karun nair
- Advertisement -

கர்நாடகாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான மகாராஜா கோப்பையின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மைசூர் வாரியர்ஸ் மற்றும் குல்பர்கா மைஸ்டிக்ஸ் ஆகிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு பெங்களூருவில் இருக்கும் புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற குல்பர்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மைசூர் அணிக்கு 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கார்த்திக் 41 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் சமர்த் அதிரடியாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த நட்சத்திர சீனியர் வீரர் கருண் நாயர் நீண்ட நாட்கள் கழித்து சரவெடியாக விளையாடி தம்முடைய அணிக்கு விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்த அவர் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவெடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு ரசிகர்களை ரன் மழையில் நனைத்தார்.

- Advertisement -

அதிரடி நாயர்:
அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடிய சமர்த் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 80 (50) ரன்கள் குவித்து 2வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய கருண் நாயர் கடைசி வரை அவுட்டாகாமல் எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்து 7 பவுண்டரி 9 மெகா சிக்சர்களை தெறிக்கவிட்டு 107* (42) ரன்கள் குவித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடைய சரபடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் மைசூர் 248/2 ரன்கள் எடுத்து வெற்றி ஆரம்பத்திலேயே உறுதி செய்தது என்றே சொல்லலாம்.

அதைத் தொடர்ந்து 249 என்ற கடினமான இலக்கை துரத்திய குல்பர்கா அணி பேட்ஸ்மேன்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற அழுத்தமான சூழ்நிலையில் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 212/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கலீத் 54 (29) ரன்களும் நோரோஹா 61 (34) ரன்களும் எடுத்த நிலையில் பந்து வீச்சில் அசத்திய மைசூரு சார்பில் அதிகபட்சமாக மோனிஸ் ரெட்டி, ஜெகதீஷா சுசித், வாத்வாணி, கௌதம் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக 36 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற மைசூரு நாளை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து 107* ரன்கள் குவித்த முக்கிய பங்காற்றிய கருண் நாயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்த அவருகு அதன் பின் அப்போதைய கேப்டன் விராட் கோலி பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: இஷான் கிஷனால் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள தலைவலி – ஷ்ரேயாஸ் ஐயருக்கும் ஆப்பு

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சதமடித்த போது விராட் கோலி போல வாயில் கை வைத்து இனிமேல் தம்முடைய பேட் பேசும் என்ற வகையில் அவருக்கே கருண் நாயர் சிக்னல் கொடுத்து கொண்டாடினார் என்று சொல்லலாம். அந்த வகையில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement