இஷான் கிஷனால் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள தலைவலி – ஷ்ரேயாஸ் ஐயருக்கும் ஆப்பு

Shreyas-Rohit-Ishan
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலூரில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் இருவரும் பங்கேற்று பேட்டிங் பயிற்சியினை மேற்கொண்டனர். இதன் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல் விளையாடுவார்கள் என்று உறுதியானது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் வலைப்பயிற்சியின்போது அசவுகரியத்தை சந்தித்த கே.எல் ராகுல் மட்டும் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதலாவதாக விளையாடும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுல் விளையாட மாட்டார் என்றும் அதன் பிறகு நேபாள் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் களமிறங்குவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இஷான் கிஷன் இந்திய அணிக்குள் வருவதால் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாட கூடியவர். ஆனால் இஷான் கிஷன் துவக்க வீரராகவே இறங்கி விளையாடி பழக்கப்பட்டவர்.

- Advertisement -

அப்படி பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இஷான் கிஷன் துவக்க வீரராக சுப்மன் கில்லுடன் களமிறங்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா நான்காவது இடத்திலும், நான்காவது இடத்தில் வழக்கமாக இறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்திற்கும் தள்ளப்படுவார்கள். இப்படி இஷான் கிஷன் ஒருவரால் டாப் ஆர்டர் பேட்டிங் ஆர்டரே மொத்தமாக மாற்றும் தலைவலி ரோஹித்துக்கு உள்ளது.

இதையும் படிங்க : அப்போ மட்டும் அது இருந்திருந்தா சச்சின் ஊரில் 2011 உ.கோ ஜெயிச்சுருக்க மாட்டோம் – விராட் கோலி வித்யாச பேட்டி

அதேபோன்று தான் வழக்கமாக விளையாடி உறுதி செய்திருந்த நான்காவது இடத்தையும் ஷ்ரேயாஸ் ஐயர் இழக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒரு புறம் துவக்க வீரர்களாக இடது கை மற்றும் வலது கை வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்குவதும் அணிக்கு நல்லது தான் என்று சிலர் கருத்துக்களையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement