அப்போ மட்டும் அது இருந்திருந்தா சச்சின் ஊரில் 2011 உ.கோ ஜெயிச்சுருக்க மாட்டோம் – விராட் கோலி வித்யாச பேட்டி

Virat Kohli 2011 World CUP
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் கோலாகலமாக துவங்கி நவம்பர் 16 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற 2011 உலகக்கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுடன் சொல்லி அடித்த இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

குறிப்பாக யுவராஜ் சிங் தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்ற நிலையில் சச்சின், சேவாக், ஜஹீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, முனாப் படேல் போன்ற சீனியர் வீரர்கள் பொறுப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினர். அதே போல விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இளம் வீரர்கள் முக்கியமான முக்கிய தருணங்களில் சீனியர்களுக்கு நிகராக அசத்திய நிலையில் மாபெரும் ஃபைனலில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

விராட் கோலி நெகிழ்ச்சி:
இந்நிலையில் பல வருடங்களாக போராடி ஒரு வழியாக சொந்த மண்ணில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வென்ற அந்த உலகக்கோப்பை தம்முடைய கேரியரிலும் உச்சகட்ட சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். melum, அந்த சமயத்தில் 23 வயதில் இருந்த தமக்கு அந்த உலகக் கோப்பையின் கடினத்துவம் தெரியாமல் இருந்ததாக தெரிவிக்கும் விராட் கோலி ஒருவேளை 2011 காலகட்டங்களில் தற்போது போல சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக இருந்திருந்தால் தங்களால் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியுமா என்பது சந்தேகம் என வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011 உலகக் கோப்பையை வென்றது நிச்சயமாக என்னுடைய கேரியரின் ஹைலைட்டாகும். அந்த சமயத்தில் 23 வயதில் இருந்த எனக்கு உலகக்கோப்பையின் அளவு மற்றும் கடினத்துவம் புரியாமல் இருந்தது. ஆனால் தற்போது 34 வயதாகும் நான் சமீப காலங்களில் வெல்லாத நிறைய உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளேன். எனவே 2011 அணியில் இருந்த சீனியர்களின் உணர்வுகளை தற்போது நான் உணர்கிறேன். குறிப்பாக அது சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலக கோப்பையாக இருந்தது”

- Advertisement -

“ஏற்கனவே நிறைய உலகக் கோப்பையில் விளையாடிய அவர் இறுதியில் தம்முடைய சொந்த ஊரான மும்பையில் வென்றது ஸ்பெஷலாகும். அதாவது அது ஒரு கனவு நிஜமான காரணமாகும். மேலும் அந்தத் தொடரில் பல்வேறு நகரங்களுக்கு பயணித்த எங்கள் வீரர்கள் மீது இருந்த அழுத்தம் இப்போதும் நினைவிருக்கிறது. நல்ல வேலையாக அந்த சமயத்தில் சமூக வலைதளங்கள் இல்லை. ஒருவேளை அப்போது சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் அது தூங்காத இரவுகளை கொடுத்திருக்கலாம்”

இதையும் படிங்க: மும்பை வீரர் என்பதால் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டாரா? இந்திய அணியின் தேர்வு பற்றி கேப்டன் ரோஹித் சர்மா ஓப்பன்டாக்

“இருப்பினும் விமான நிலையங்களில் இருந்த ரசிகர்கள் உலகக்கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினர். மேலும் அத்தொடரில் சீனியர்கள் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டனர். அவர்களால் உலகக் கோப்பையை வென்றது நிச்சயமாக ஒரு மேஜிக் நிகழ்வாகும்” என்று கூறினார்.

Advertisement