மும்பை வீரர் என்பதால் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டாரா? இந்திய அணியின் தேர்வு பற்றி கேப்டன் ரோஹித் சர்மா ஓப்பன்டாக்

Rohit Sharma Tilak Varma
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்தும் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்தும் துவங்குகிறது. இந்த 2 தொடர்களிலும் ஆசிய கண்டத்தின் மிகவும் வலுவான டாப் அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெற்றி வாகை சூடி ஆசிய மற்றும் உலக சாம்பியனாக சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதில் முதலாவதாக நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த 17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து தான் இறுதிக்கட்டமாக உலகக் கோப்பைக்கு விளையாடும் 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் இந்த ஆசியக் கோப்பையில் இடம் பெறாத வீரர்களுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரோஹித்தின் பதில்:
அந்த வகையில் பார்க்கும் போது இந்த அணியில் மணிக்கட்டு ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாததும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சுமாராக செயல்பட்டும் சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வானதும் வெறும் கண்துடைப்புக்காக சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதை விட இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இதுவரை ஒருநாள் போட்டிகளிலேயே அறிமுகமாகாத திலக் வர்மா நேரடியாக ஆசிய கோப்பை அணியில் தேர்வாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 வருடங்கள் சிறப்பாக விளையாடினார் என்பதற்காக ரோகித் சர்மா ஆதரவுடன் நேரடியாக இந்த ஆசிய கோப்பை அணியில் தேர்வாகியுள்ளதாக சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக விமர்சித்தனர். இந்நிலையில் திலக் வர்மா உட்பட எந்த வீரரையும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தேர்வு செய்யவில்லை அல்லது கழற்றி விடவில்லை என கேப்டன் ரோகித் சர்மா இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். இது பற்றி ஆசிய கோப்பைக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அணியின் சிறந்த கலவையை தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு காரணங்களுக்காக சில வீரர்கள் இடம் பெற மாட்டார்கள். இருப்பினும் நானும் ராகுல் பாயும் (டிராவிட்) அந்த வீரர்களிடம் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதை வெளிப்படையாக சொல்வதற்கு முயற்சித்துள்ளோம். குறிப்பாக ஒவ்வொரு முறையும் விளையாடும் 11 பேர் அணியை தேர்வு செய்த பின் அதில் இடம் பெறாத வீரர்களிடம் ஏன் தேர்வாகவில்லை என்பதை பற்றி நாங்கள் விளக்குவதற்கு முயற்சித்துள்ளோம்”

இதையும் படிங்க: கே.எல் ராகுலுக்கு பதிலா சஞ்சு சாம்சனை சேக்கவே முடியாதாம். அப்போ அப்போ பர்ஸ்ட் மேட்சுக்கு – யாரு கீப்பர்?

“தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் ஒவ்வொரு நாளும் நேருக்கு நேராக அதைப் பற்றி விளக்கியுள்ளோம். எனவே எனக்கு ஒரு வீரரை பிடிக்காது என்பதற்காக யாரையும் நீக்குவதில்லை. பொதுவாகவே கேப்டன்ஷிப் என்பது சொந்த விருப்பு வெறுப்புகளை பொறுத்தது கிடையாது. அதனால் ஒரு வீரர் தேர்வு செய்யப்படாமல் போனால் அதற்கான பின்னணி காரணம் இருக்கும். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்ய அதிர்ஷ்டமில்லாமல் போனால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.

Advertisement