கே.எல் ராகுலுக்கு பதிலா சஞ்சு சாம்சனை சேக்கவே முடியாதாம். அப்போ அப்போ பர்ஸ்ட் மேட்சுக்கு – யாரு கீப்பர்?

Samson-and-Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கடந்த ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் வெளிநாட்டிற்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் எந்த ஒரு போட்டியிலும் இந்திய அணிக்காக பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 50 உலகக் கோப்பை தொடரில் கே.எல் ராகுல் இடம்பெற வேண்டுமெனில் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்று பலராலும் பேசப்பட்டது. அதன்படியே கே.எல் ராகுலும் பெரிய இடைவெளிக்கு பிறகு ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

இதனால் ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டார். இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடி தனது திறனை நிரூபித்து உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆசிய கோப்பை தொடருக்காக ஆகஸ்ட் 29-ஆம் தேதி இன்று இலங்கைக்கு புறப்பட்ட இந்திய அணியுடன் கே.எல் ராகுல் பயணிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியினை தவறவிடும் அவர் நேபாள் அணிக்கு எதிரான இடண்டாவது போட்டியில் தான் இந்திய அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்னாக விளையாடப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் டிராவலிங் பேக்கப் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை நேரடியாக அணியில் சேர்க்கமுடியாது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் எதிரி இல்ல, போன டைம் அவங்க செஞ்சத மறந்துடாதீங்க – இந்தியாவை எச்சரித்த கவாஸ்கர்

ஒரு வீரரை அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கினாலோ அல்லது ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு முழுவதுமாக அணியிலிருந்து வெளியேறினால் மட்டுமே அவரை முதன்மை அணியின் வீரராக மாற்ற முடியும். இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிஷனே விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார் என்று தெரிகிறது.

Advertisement