ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் எதிரி இல்ல, போன டைம் அவங்க செஞ்சத மறந்துடாதீங்க – இந்தியாவை எச்சரித்த கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் 50 ஓவர் போட்டிகளாக நடக்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்தியா அதற்கு தேவையான தங்களுடைய இறுதிக்கட்ட 15 வீரர்களை இந்த தொடரிலிருந்து தேர்வு செய்ய உள்ளது.

முன்னதாக ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இம்முறை 8வது கோப்பையை வென்று சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க போராட தயாராகியுள்ளது. இருப்பினும் அதற்கு பரம எதிரியான பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலகக் கோப்பையில் காலம் காலமாக தங்களுக்கு தோல்வியை கொடுக்கும் இந்தியாவை இம்முறை அவர்களுடைய சொந்த மண்ணில் பழி தீர்ப்பதற்கு முன்னோட்டமாக இந்த ஆசிய கோப்பையில் வெற்றி வாகை சூடுவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

- Advertisement -

கவாஸ்கர் எச்சரிக்கை:
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் ஜாவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார். அதாவது கடந்த ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் யாருமே எதிர்பாராத வகையில் தோற்கடித்த இலங்கை இறுதியில் பாகிஸ்தானையும் வென்று 6வது கோப்பையை வென்று சாதனை படைத்தது.

எனவே இலங்கையிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கும் அவர் உலக கோப்பையில் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் நாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை பற்றி மட்டும் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அங்கே இலங்கையும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் அவர்கள் கடந்த ஆசிய கோப்பை வென்றுள்ளார்கள். எனவே இந்தியா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய 2 அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டி மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும்”

- Advertisement -

இதையும் படிங்க: 2023 ஆசிய கோப்பையின் இந்திய அணியின் பலம், பலவீனங்கள், வாய்ப்பு என்ன? முன்னோட்டமான அலசல் இதோ

“மேலும் உலகக்கோப்பையில் மற்ற அணிகளைப் பற்றி கவலைப்படாமல் நான் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவார்களா என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நிலைமையில் காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் தங்களுடைய உடல் நிலையைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்களுக்கு உதவி புரிய உடல் பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். அதனால் லேசான காயத்தை சந்தித்துள்ள கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு தற்காலிகமான 2 – 3 நாட்கள் ஓய்வு கொடுப்பது அவசியமாகும். இல்லையென்றால் காயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement