2023 ஆசிய கோப்பையின் இந்திய அணியின் பலம், பலவீனங்கள், வாய்ப்பு என்ன? முன்னோட்டமான அலசல் இதோ

Asia Cup INDIA
- Advertisement -

அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு ஆசிய கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் நடக்கும் 2023 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெறும் இந்த தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 8வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. மேலும் இத்தொடரிலிருந்து உலகக் கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை இந்தியா தேர்வு செய்ய உள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணியின் வளம் பலவீனம் போன்ற அம்சங்களை பற்றி அலசுவோம் வாங்க:
1. பலம் (வலுவான டாப் ஆர்டர்): ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே 3 இரட்டை சதங்களை அடித்து சுமார் 10000 ரன்களை அடித்துள்ள கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

- Advertisement -

தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் கில்லுக்கு அடுத்தபடியாக ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்த விராட் கோலி களமிறங்க உள்ளார். எனவே தரமும் அனுபவமும் இளமையும் கொண்ட இந்த வீரர்களால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்ற அணிகளை காட்டிலும் வலுவாக இருக்கிறது.

2. பலம் (வேகம்): வேகப்பந்து வீச்சு துறையின் கருப்பு குதிரை ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அபாரமான கம்பேக் கொடுத்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன் தரவரிசையில் நம்பர் 2வது இடத்தில் இருக்கும் முகமது சிராஜ் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பது ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோரை கொண்ட பாகிஸ்தானுக்கு நிகராக இந்தியனின் வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் காட்சிப்படுத்துகிறது.

- Advertisement -

3. பலம் (சுழல்): அதே போல குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தற்சமயத்தில் அற்புதமான ஃபார்மில் இருப்பதால் இந்தியாவின் சுழல் பந்து வீச்சு துறையும் பாலமானதாகவே இருக்கிறது.

4. பலவீனம் (மிடில் ஆர்டர்): ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் இதுவரை எந்த போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக இந்த ஆசிய கோப்பையில் களமிறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. அதே போல பேக்-அப் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள சூரியகுமார் யாரோ இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தாத நிலையில் திலக் வர்மா ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகாமலேயே இருக்கிறார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

5. வாய்ப்பு: 4வது இடத்தில் விளையாடுவதற்கு நிறைய குழப்பங்கள் இருந்த நிலைமையில் ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து விளையாட உள்ளார். ஒருவேளை அவர் குணமடையாவிட்டால் கிடைக்கப் போகும் வாய்ப்பில் சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அதே போல கேஎல் ராகுல் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை இசான் கிசான் பொன்னாக மாற்றினால் உலக கோப்பை அணியிலேயே இடம் பிடிக்கலாம்.

இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம் 2023 ஸ்பெஷல் : இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் நடைபெற்ற டாப் 6 நிகழ்வுகள்

6. அச்சுறுத்தல்: காயத்திலிருந்து வரும் வீரர்களின் ஃபார்ம் என்னவென்று தெரியாமல் இருப்பது இந்திய அணியில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அதே போல ஹர்திக் பாண்டியாவுக்கு பின் பேட்டிங் வரிசையில் ஆழமில்லாததும் மற்றொரு பின்னடைவாகும்

Advertisement