தேசிய விளையாட்டு தினம் 2023 ஸ்பெஷல் : இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் நடைபெற்ற டாப் 6 நிகழ்வுகள்

World-Cricket
- Advertisement -

இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆறு சுவாரஸ்யமான தருணங்களை இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் இந்த ஆண்டு ரசிகர்களின் மத்தியில் கவனத்தைக ஈர்த்த ஆறு முக்கிய தருணங்கள் இதோ :

1) WTC பைனல் : டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரசியத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க கொண்டுவரப்பட்ட இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இரண்டாவது முறையாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தவறவிட்டது.

- Advertisement -

2) ஆஷஸ் தொடர் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் அஷஸ் தொடரானது மிகப்பெரிய கவுரவமான தொடராக பார்க்கப்பட்டு வரும் வேளையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றி பெற்றதன் காரணமாக இந்த வருட தொடரானது சமநிலையில் முடிந்தது. இதன் காரணமாக கடந்த முறை சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலிய அணியே தொடர்ந்து சாம்பியனாக நீடிக்கிறது.

3) வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாதது : உலக கோப்பை தொடரானது ஆரம்பித்ததிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இருமுறை சாம்பியனாக இருந்த வேளையில் அனைத்து தொடர்களிலுமே தவறாமல் இடம் பெறும். ஆனால் தற்போது நிரந்தர வீரர்கள் இல்லாமல் தவிக்கும் அந்த அணி கத்துக்குட்டி அணிகளிடம் கூட தோல்வியை சந்தித்து தற்போது இந்த ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் வாய்ப்பினை வரலாற்று முதல் முறையாக தவற விட்டுள்ளது.

- Advertisement -

4) நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது : பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலும் ஒரு அணி மற்ற அணியை வீழ்த்தி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு அரிதான நிகழ்வில் நியூசிலாந்து அணி வெறும் ஒரே ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் கவனத்திற்கு ஈர்த்தது.

5) பென் ஸ்டோக்ஸ் ரிட்டன் : கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் இனி மேல் தான் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த போவதாக கூறி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விடை பெற்றிருந்த வேளையில் 2019-ஆம் ஆண்டு போலவே இந்த 2023-ஆம் ஆண்டும் உலகக் கோப்பையை நான் வெற்றி பெற விரும்புகிறேன் என்றும் அதற்காக எனது பங்களிப்பை வழங்க இங்கிலாந்து அணிக்கு திரும்புவதாக அவரது அறிவித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : தேசிய விளையாட்டு தினம் 2023 ஸ்பெஷல் : இதுவரை இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த டாப் 6 சிறந்த தருணங்கள்

6) டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணி செய்த மிகப்பெரிய சேசிங் : இந்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் அடித்தது. பின்னர் 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இமாலய இலக்கினை துரத்திய தென்னாப்பிரிக்க அணியானது 18.5 ஓவர்களில் 7 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கினை சேசிங் செய்து சாதனை படைத்தது.

Advertisement