வீடியோ : ஷமியின் வேகத்தில் டக் அவுட்டானாலும் ஸ்ரேயாஸ் ஐயர், தோனியை முந்திய ஜோஸ் பட்லர் – தனித்துவமான ஐபிஎல் சாதனை

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் தன்னுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டேவிட் மில்லர் 46 (40) சுப்மன் கில் 45 (34) ஹர்டிக் பாண்டியா 28 (19) என முக்கிய வீரர்களின் நல்ல ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 177/7 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 178 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு இந்த சீசனில் அதிரடியாக செயல்பட்டு நல்ல தொடக்கத்தை கொடுத்து வந்த யசஸ்வி ஜெய்ஸ்வால் 1 (7) – ஜோஸ் பட்லர் 0 (5) என ஓப்பனிங் ஜோடி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். கூடவே தேவ்தூத் படிக்கல் 26 (25), ரியன் பராக் 5 (7) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 55/4 என தடுமாறிய ராஜஸ்தான் வெற்றி கேள்விக்குறியான போது அதிரடியாக செயல்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் மாயாஜால ஸ்பின்னரான ரசித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

- Advertisement -

சோதனையிலும் சாதனை:
தொடர்ந்து 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (32) ரன்களை வெளுத்து வாங்கி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்த அவருக்கு அடுத்தபடியாக துருவ் ஜுரேல் 18 (10) ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 (3) ரன்கள் விளாசி போட்டியில் பெரிய திருப்பு முனையை கொடுத்தனர். அதை மறுபுறம் அதிரடியாக விளையாடி பயன்படுத்திய சிம்ரோன் ஹெட்மயர் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 56* (26) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் செய்து கடைசி ஓவரில் வெற்றி பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

முன்னதாக இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்த போது 4 பந்துகளை எதிர்கொண்டும் ரன் எடுக்காமல் தடுமாறினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ஏதாவது செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அவர் முகமது ஷமி வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் பின்பக்க திசையில் வித்தியாசமாக அடிக்க முயற்சித்தார். ஆனால் அதற்காக அதிகமாக விலகிச் சென்றதால் தெளிவாக தெரிந்த 3 ஸ்டம்ப்களையும் குறி பார்த்து தன்னுடைய வேகத்தால் பதம் பார்த்த முகமது ஷமி க்ளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி சென்றது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2021 டி20 உலக கோப்பையில் சதமடித்து 2022 ஐபிஎல் சீசனில் ஆரம்பம் முதலே சரமாரியாக அடித்து நொறுக்கிய அவர் 863 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதை விட 2022 டி20 உலக கோப்பையை இங்கிலாந்துக்கு கேப்டனாக வென்று கொடுத்த அவர் இந்த ஐபிஎல் தொடரிலும் முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த 2 அரை சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

அப்படிப்பட்ட அவர் அரிதாக டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே அமைந்தது. சொல்லப்போனால் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய ஜோஸ் பட்லர் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட்டானார்.

இதையும் படிங்க:வீடியோ : தேவையின்றி ஸ்லெட்ஜிங் செய்த பாண்டியா, ரசித் கானை அடித்து நொறுக்கிய சாம்சன் – கிறிஸ் கெயிலுக்கு நிகராக மாஸ் பதிலடி

ஆனால் அதன் பின் கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து 84 இன்னிங்ஸில் டக் அவுட்டாகாமல் 5 சதங்கள் உட்பட 3035 ரன்களை விளாசி ரன் மழை பொழிந்து வரும் அவர் நேற்று 86வது இன்னிங்ஸில் டக் அவுட்டானார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் தொடர்ச்சியாக அதிக இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோஸ் பட்லர் : 84 (2016 – 2023)*
2. ஷ்ரேயாஸ் ஐயர் : 82 (2016 – 2022)
3. எம்எஸ் தோனி : 72 (2010 – 2015)

Advertisement