தேவையின்றி ஸ்லெட்ஜிங் செய்த பாண்டியா, ரசித் கானை அடித்து நொறுக்கிய சாம்சன் – கிறிஸ் கெயிலுக்கு நிகராக மாஸ் பதிலடி

Sanju Samson
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 177/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுமன் கில் 45 (34) ரன்களும் டேவிட் மில்லர் 46 (30) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 178 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 1 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் யாருமே எதிர்பாராத வகையில் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். போதாக்குறைக்கு தேவ்தூத் படிக்கல் 26 (25) ரியான் பராக் 5 (7) என அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 55/4 என ஆரம்பத்திலேயே திணறிய ராஜஸ்தானின் வெற்றியும் கேள்விக்குறியானது.

- Advertisement -

மாஸ் பதிலடி:
ஆனால் அப்போது நங்கூரமாக நின்ற கேப்டன் கேப்டன் சஞ்சு சாம்சன் அதற்கு நிகராக அதிரடியாக விளையாடி தனது அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அப்போது தேவையின்றி அவரது அருகே வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்லெட்ஜிங் செய்து வீழ்த்தி விடலாம் என்ற எண்ணத்துடன் வம்பிழுத்தார். குறிப்பாக கடந்த வருடம் இதே மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் தோற்கடித்த மமதையில் சில வார்த்தைகளை உபயோகித்து பாண்டியா பேசியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

ஆனால் அதற்காக பதறாமல் கவனத்தை சிதற விடாமல் பொறுமையாக இருந்த சஞ்சு சாம்சன் உலக டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் அதிக ஹாட்ரிக் (4) விக்கெட்களையும் எடுத்து உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வரும் ரசித் கான் வீசிய 13வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு மாஸ் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் மாயாஜால ஸ்பின்னராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற மார் தட்டும் பெருமையையும் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் பெற்றார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மட்டுமே 2018இல் பஞ்சாப் அணிக்காக ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ரசித் கானை ஹாட்ரிக் சிக்ஸர்களைதாண்டி தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.

இந்த போட்டியில் அவருக்கு நிகராக சிக்ஸர்களை தெறிக்க விட்ட சஞ்சு சாம்சன் வம்பிழுத்த பாண்டியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து 3 பவுண்டரி 6 சிக்சருடன் 60 (32) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் அவருடன் விளையாடிய துருவ் ஜுரேல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 (10) ரன்களும் அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் யாருமே எதிர்பாராத வகையில் முகமது ஷமிக்கு எதிராக 1 பவுண்டரி 1 சிக்ஸரையும் பறக்க விட்டு 10 (3) ரன்கள் விளாசி திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இறுதியில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சிம்ரோன் ஹெட்மயர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 56* (26) குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரிலேயே 179/7 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கு சூப்பர் பினிஷிங் கொடுத்த சிம்ரன் ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது வென்றார். குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் ரசித் கான் 2 விக்கெட் எடுத்தும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 25 ரன்கள் எடுக்க தவறியதும் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:RR vs GT : நாங்க 2 பேர் நல்லா பேட்டிங் பண்ணியிருந்தாலும் வெற்றிக்கு காரணம் அவங்கதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

அதை விட கடந்த 2 போட்டிகளில் டக் அவுட்டானதால் “2 ஆம்லெட் சாப்பிட்டு விட்டேன் எனவே இப்போட்டியில் அடிக்க வேண்டும்” என்று போட்டியின் துவக்கத்தில் தெரிவித்த சஞ்சு சாம்சன் சொன்னது போலவே சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வைத்தார். அப்படி சிறப்பாக செயல்படும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஹர்ஷா போக்லே உள்ளிட்ட நட்சத்திரங்களும் ரசிகர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement