RR vs GT : நாங்க 2 பேர் நல்லா பேட்டிங் பண்ணியிருந்தாலும் வெற்றிக்கு காரணம் அவங்கதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju-Samson
- Advertisement -

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற 23-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அபார வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் போட்டியில் எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையிலிருந்து சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது தற்போது பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Hetmyer

- Advertisement -

அந்த வகையில் நேற்று நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது 20 ஓவர்களின் வடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து ஜெயஷ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரது விக்கெட்டை இழந்தது.

நான்கு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியானது 47 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டையும், 55 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டையும் இழந்தது. இதன் காரணமாக நிச்சயம் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் நான்காவது வீரராக களம் புகுந்த சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி என 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Sandeep Sharma

அதேபோன்று பின்வரிசையில் 26 பந்துகளை சந்தித்த அதிரடி ஆட்டக்காரராக ஷிம்ரன் ஹெட்மயர் ஐந்து சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரது இந்த சிறப்பான ஆட்டமே ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : ஒரு தரமான அணிக்கு எதிராக ஒரு தரமான மைதானத்தில் விளையாடி பெரும் இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி குஜராத் அணியை கட்டுக்குள் வைத்தனர்.

இதையும் படிங்க : GT vs RR : உண்மையிலே பவர்பிளே முடிஞ்சி இப்படி நடக்கும்னு நினைக்கல – தோல்வி குறித்து ஹார்டிக் பாண்டியா வருத்தம்

170 ரன்களுக்குள் அவர்களை நிறுத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அதையும் தாண்டி சில ரன்கள் சென்று விட்டது. இருப்பினும் இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு சில குறைகள் பீல்டிங்கில் இருந்தாலும் பந்துவீச்சில் எங்களது அணி அற்புதமாக செயல்பட்டது. இந்த போட்டியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் தான் காரணம் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement