GT vs RR : உண்மையிலே பவர்பிளே முடிஞ்சி இப்படி நடக்கும்னு நினைக்கல – தோல்வி குறித்து ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

GT vs RR

- Advertisement -

பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் அவருடன் நிலைத்து நின்று விளையாடிய ஹெட்மயர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : உண்மையாகவும், நேர்மையாகவும் சொல்ல வேண்டுமெனில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய வருத்தம் தான். ஏனெனில் பவர்பிளேவிற்குள் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு ரன்களையும் குறைவாகவே வழங்கி இருந்தோம்.

Hetmyer

பவர்பிளேவை நல்லபடியாக துவங்கியும் அதன் பிறகு ஏற்பட்ட இந்த தோல்வி வருத்தம் அளிக்கிறது. இதுதான் டி20 கிரிக்கெட்டின் அழகு என்பது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை எங்களது அணியின் வீரர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதுமே போட்டி முற்றிலுமாக முடிந்தால் மட்டுமே அது முழுமை அடைந்ததாக கணக்கு.

- Advertisement -

அந்த வகையில் இந்த தோல்வி எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்துள்ளது. இந்த போட்டியில் நான் ஆட்டமிழந்த பிறகு அடுத்த சில ஓவர்களை ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விட்டனர். நிச்சியம் இந்த இன்னிங்சில் 200 ரன்களை குவித்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். எங்களது அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டதாக கருதுகிறேன்.

இதையும் படிங்க : IPL 2023 : இம்பேக்ட் வீரராக அசத்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா – ஷிகர் தவானின் சாதனையை உடைத்து புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

இது போன்ற தவறுகளை சரி செய்து இனிவரும் போட்டிகளில் நாங்கள் பலமாக திரும்புவோம். அதோடு இப்போது தொடரின் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம் இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. நிச்சயம் இந்த தவறுகளை நாங்கள் சரி செய்வோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement