IPL 2023 : இம்பேக்ட் வீரராக அசத்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா – ஷிகர் தவானின் சாதனையை உடைத்து புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோகித் சர்மா தம்மைத் தாமே இம்பேக்ட் வீரராக மாற்றிக் கொண்டதால கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/6 ரன்கள் எடுத்தது.

KKR vs MI

- Advertisement -

இருப்பினும் அந்த அணிக்கு ஜெகதீசன் 0, குர்பாஸ் 8, நிதிஷ் ராணா 13 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக 6 பவுண்டரி 9 சிக்சரை பறக்க விட்ட வெங்கடேஷ் ஐயர் சதமடித்து 104 (51) ரன்கள் விளாசினார். குறிப்பாக கொல்கத்தா அணிக்காக ப்ரெண்டன் மெக்கல்லத்துக்கு பின் (2008இல்) 15 வருடங்கள் கழித்து சதமடித்த 2வது வீரர் என்ற சாதனையும் படைத்த அவரை தவிர்த்து இதர வீரர்கள் பெரிய ரண்களை எடுக்காத நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் சாக்கின் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ஹிட்மேன் சாதனை:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரிலீ மெரிடித்துக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இசான் கிசானுடன் இணைந்து அதிரடியாக 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 20 (13) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் மிரட்டலாக செயல்பட்ட இசான் கிசான் 5 பவுண்டரி 5 சிக்ஸ்டருடன் 58 (25) ரன்களும் டக் அவுட்டானத்திலிருந்து ஃபார்முக்கு திரும்பிய சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (25) ரன்களும் எடுத்தனர். இறுதியில் திலக் வர்மா 30 (25) ரன்களும் டிம் டேவிட் 24* (13) ரன்களும் எடுத்து 17.4 ஓவரிலேயே 186/5 ரன்கள் எடுக்க வைத்து மும்பையை வெற்றி பெற வைத்தனர்.

MI vs KKR

முன்னதாக ஆரம்ப காலங்களில் அதிரடியாக செயல்பட்டு ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரோகித் சர்மா சமீப காலங்களாகவே தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 2022 சீசனில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்ட அவர் வரலாற்றிலேயே மும்பை புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் டெல்லிக்கு எதிரான 3வது போட்டியில் 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக அரை சதமடித்து முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த நிலையில் வரலாற்றில் எப்போதுமே கொல்கத்தாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த போட்டியில் அடித்த 20 ரன்களையும் சேர்த்து இதுவரை மொத்தமாக 1040 ரன்களை அடித்துள்ளார்.

 

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 1040*, கொல்கத்தாவுக்கு எதிராக
2. ஷிகர் தவான் : 1029, சென்னைக்கு எதிராக
3. டேவிட் வார்னர் : 1018, கொல்கத்தாவுக்கு எதிராக
4. டேவிட் வார்னர் : 1005, பஞ்சாப்புக்கு எதிராக
5. விராட் கோலி : 979, சென்னைக்கு எதிராக
6. ரோஹித் சர்மா : 977, டெல்லிக்கு எதிராக
7. விராட் கோலி : 975, டெல்லிக்கு எதிராக

இதையும் படிங்க:IPL 2023 : மும்பைக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் – டூயன் யான்சன், ஒரே போட்டியில் நிகழ்ந்த இரட்டை அரிதான சாதனை

தற்போது 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் மும்பை அடுத்ததாக ஏப்ரல் 18ஆம் தேதி 9வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத்துக்கு எதிராக தன்னுடைய 5வது போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement