IPL 2023 : மும்பைக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் – டூயன் யான்சன், ஒரே போட்டியில் நிகழ்ந்த இரட்டை அரிதான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மும்பையை வழி நடத்தினார். அதை விட அவரது தலைமையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு வழியாக அறிமுகமாக களமிறங்கினார்.

மும்பையின் அடையாளமாக திகழும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தந்தையின் வழிகாட்டுதலுடன் வேகப்பந்து வீச்சாளராக பயிற்சிகளை தொடங்கினார். ஆரம்பத்தில் உள்ளூர் அளவில் செயல்பட்டு பின்னர் மும்பை அணியில் நெட் பவுலராக செயல்பட்டு வந்த அவர் கடந்த வருடமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜாம்பவானின் மகன் என்பதால் விரைவாக வாய்ப்பு பெற்று விட்டார் என்று விமர்சனங்கள் வரும் என்பதற்காகவே இழுத்தடிக்கப்பட்ட அவருக்கு கடந்த வருடம் புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடித்தும் கடைசி சில சம்பிரதாய போட்டிகளில் கூட மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கவில்லை.

- Advertisement -

அரிதான சாதனை:
அந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக சதமடித்து பந்து வீச்சாளராக செயல்பட்டார். அந்த வழியில் தற்போது முன்பை விட நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் ஒரு வழியாக தன்னுடைய 23வது வயதில் இன்று அறிமுகமானார். களத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் சாரா டெண்டுல்கர் உள்ளிட்ட தன்னுடைய குடும்பத்தினரின் பாராட்டுகளுடன் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தன்னுடைய கனவு தொப்பியை வாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு வழியாக மும்பை அணிக்காக விளையாட்டினார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய முதல் தந்தை மகன் ஜோடி என்ற தனித்துவமான சாதனையையும் சச்சின் – டெண்டுல்கர் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் இன்று படைத்தனர். அதே போல இதே போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது இடது கை வேகப்பந்து பேச்சாளர் டூயன் யான்சனும் மும்பை அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார். இவருடைய சகோதரர் மார்கோ யான்சென் ஏற்கனவே தென்னாபிரிக்காவுக்காக ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதுடன் இதே ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் இன்றைய போட்டியில் இவர் களமிறங்கியுள்ளதால் ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய முதல் இரட்டை சகோதரர்கள் ஜோடி என்ற தனித்துவமான சாதனையை மார்கோ யான்சென் – டூயன் யான்சென் சகோதரர்கள் இன்று படைத்தனர். அப்படி ஒரே போட்டியில் ஐபிஎல் காணாத 2 அரிதான நிகழ்வுகள் நடந்துள்ளது ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்காக 2008இல் சதமடித்த 2வது வீரராக சாதனை படைத்த வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி 9 சிக்சருடன் 104 (51) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 21* (11) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் சாக்கின் 2 விக்கெட்களை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் 2 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்கவில்லை.

இதையும் படிங்க:KKR vs MI : நான் செஞ்சுரி அடிக்கும்போதா இப்படி ஆகனும். தோல்விக்கு காரணம் இதுதான் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

அதை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 20 (13), இசான் கிசான் சரவெடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 58 (25) சூரியகுமார் யாதவ் 43 (25), திலக் வர்மா 30 (25), டிம் டேவிட் 24* (13) என முக்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்ததால் 17.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த சீசனில் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Advertisement