KKR vs MI : நான் செஞ்சுரி அடிக்கும்போதா இப்படி ஆகனும். தோல்விக்கு காரணம் இதுதான் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

Venkatesh Iyer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

KKR vs MI

- Advertisement -

அதன்படி ஞாயிறு அன்று மதியம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்ற இவருக்கு தோல்வி அடைந்தாலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Venkatesh Iyer 1

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் : நான் சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இன்னும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து விட்டோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் என்னுடைய இந்த ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. கொல்கத்தா அணியின் நிர்வாகம் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அதனை நினைத்து எனது பங்களிப்பை வழங்கி வருகிறேன்.

- Advertisement -

இந்த மைதானம் பேட்டிங்-க்கு மிகவும் ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. முதல் 30-40 ரன்களை கடந்ததுமே பிறகு எப்படி ஆட வேண்டும் என்று நன்றாக தெரிகிறது. அந்த வகையில் நான் இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களை ஆரம்ப கட்டத்தில் நன்றாக கணித்து பிறகு என்னுடைய கிரீசை பயன்படுத்தி நல்ல ஷாட்டுகளை விளையாடினேன். இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு முக்கியமான காரணமாக 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : பட்லர், ஜெய்ஸ்வால் கைவிட்டும் தரமான குஜராத்தை துவம்சம் செய்த சாம்சன், ஹெட்மயர் – பறிபோன வெற்றியை பறித்து அபாரம்

ஒருவேளை இன்னும் கூடுதலாக ஒரு 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் நிச்சயம் மும்பை அணியை அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க முடியும். இருந்தாலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டனர் என வெங்கடேஷ் ஐயர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement