பட்லர், ஜெய்ஸ்வால் கைவிட்டும் தரமான குஜராத்தை துவம்சம் செய்த சாம்சன், ஹெட்மயர் – பறிபோன வெற்றியை பறித்து அபாரம்

GT vs RR
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கடந்த வருடம் இதே மைதானத்தில் ஃபைனலில் தோல்வியை பரிசளித்த குஜராத்துக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரித்திமான் சஹா 4 (3) ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 20 (19) ரன்களில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 (34) ரன்கள் குவித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெத் ஓவர்களில் மிரட்டலாக செயல்பட்ட அபினவ் மனோகர் 3 சிக்ஸருடன் 27 (13) ரன்களும் டேவிட் மில்லர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (30) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 177/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

போராட்ட வெற்றி:
ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 178 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் தடுமாறி 1 (7) ரன்னில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் எதிர்பாரா வகையில் ஷமியின் வேகத்தில் டக் அவுட்டாகி அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 4/2 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்கலை 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26 (25) ரன்களில் அவுட்டாக்கிய ரசித் கான் அடுத்து வந்த ரியான் பராக்கையும் 5 (7) ரன்களில் காலி செய்தார்.

அதன் காரணமாக 55/4 என மேலும் திண்டாடிய ராஜஸ்தானின் வெற்றி பறி போனதாக பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் விரைவாக ரன்களை சேர்த்து மீட்டெடுக்க போராடினார். குறிப்பாக மாயாஜால ஸ்பின்னரான ரசித் கான் ஓவரில் அடுத்தடுத்த 3 சிக்சர்களை தெறிக்க விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அவர் சிம்ரோன் ஹெட்மயருடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 60 (32) ரன்கள் குவித்து கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை வீணடிக்காத வகையில் அடுத்து களமிறங்கிய இளம் வீரர் துருவ் ஜுரேல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 18 (10) ரன்கள் குவித்ததால் வெற்றியை நெருங்கிய ராஜஸ்தானுக்கு கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது அவரை அவுட்டாக்கிய முகமது ஷமியை அடுத்ததாக எதிர்கொண்ட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசால்டாக 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 10 (3) ரன்கள் விளாசி பெரிய திருப்பு முனையை உண்டாக்கினார்.

அதன் காரணமாக நூர் அஹமத் வீசிய கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது முதல் பந்தில் டபுள் எடுத்த சிம்ரோந் ஹெட்மேயர் அடுத்த பந்தில் சிக்ஸரை பறக்க விட்டு மொத்தமாக 2 பவுண்டரி 5 சிக்சருடன் 56* (26) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க:MI vs KKR : முதல் 10 ஓவரிலேயே முடிஞ்சிபோச்சி. கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றி குறித்து – சூரியகுமார் பேட்டி

அதனால் 19.2 ஓவரிலேயே 179/7 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. குறிப்பாக கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் குஜராத்திடம் தோற்ற ராஜஸ்தான் முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக வெற்றி பதிவு செய்துள்ளது. குஜராத் சார்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும் ரசித் கான் 2 விக்கட்டுகளையும் எடுத்தும் பேட்டிங்கில் 20 ரன்களை எக்ஸ்ட்ரா எடுக்க தவறியதுடன் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சொந்த மண்ணில் வெற்றியை நழுவ விட்டது.

Advertisement