MI vs KKR : முதல் 10 ஓவரிலேயே முடிஞ்சிபோச்சி. கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றி குறித்து – சூரியகுமார் பேட்டி

SKY and Tim David
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக சேஸிங்கின் போது களமிறங்கியதால் இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தான் மும்பை அணியை தலைமை தாங்கி வழிநடத்தினார்.

KKR vs MI

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சூரியகுமார் யாதவ் முதலில் மும்பை அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 25 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

Ishan Kishan

நாங்கள் கடந்த போட்டியிலேயே நிறைய விடயங்களை பற்றி பேசி விட்டோம். அதன்படி கடந்த போட்டியில் கிடைத்த முமென்ட்டத்தை இந்த போட்டியிலும் கொண்டு வந்து இந்த போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளோம். இந்த மைதானம் மிகவும் டிரையாக இருந்ததால் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. அதோடு வான்கடே மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை சேசிங் செய்யலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது.

- Advertisement -

இஷான் கிஷன் மிகச் சிறப்பான துவக்கத்தை எங்களுக்காக கொடுத்தார். அதன் பிறகு நான் களமிறங்கும்போது எனக்கு பேட்டிங் செய்ய மிகவும் வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. அதனால் முதல் 6-7 பந்துகளை எடுத்துக் கொண்டு அதன்பிறகே அடிக்க ஆரம்பித்தேன். முதல் 7 முதல் 10 ஓவர்களிலேயே நாங்கள் நல்ல ரன்ரேட்டுடன் அதிரடியாக விளையாடியதால் முதல் பாதிலேயே எளிதான வெற்றி கிடைத்துவிடும் என்று முடிவு செய்து விட்டோம்.

இதையும் படிங்க : வீடியோ : ஒரு கேட்ச் பிடிக்க 4 ஃபீல்டர்கள் மோதல், வேடிக்கை நிகழ்த்திய ராஜஸ்தான் – குஜராத் அதிரடி ஸ்கோர்

அதன்பிறகு போட்டியை மிகச் சிறப்பாக முடித்ததில் மகிழ்ச்சி. எங்களது அணி இந்த வெற்றியை அப்படியே தொடரும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement