ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 50வது போட்டியில் ராஜஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் ரெட்டி 76*, ஹென்றிச் க்ளாஸென் ரன்கள் எடுத்தனர்.
பின்னர் சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர், கேப்டன் சாம்சன் டக் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் 67, ரியான் 77 பராக் ரன்கள் எடுத்தனர். ஆனால் கடைசியில் சிம்ரோன் ஹெட்மயர் 13, ரோவ்மன் போவல் 27 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்து அட்டாநாயகன் வென்றார்.
விராட் கோலியாக இருந்தா:
முன்னதாக இந்தப் போட்டியில் நட்சத்திர ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக விளையாடினார். பொதுவாகவே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கக்கூடிய அவர் இப்போட்டியில் அபிஷேக் சர்மா 12, அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் அவுட்டானதால் 35/2 என தடுமாறிய ஹைதராபாத் அணியை மீட்டெடுப்பதற்காக நிதானமாக விளையாடினார்.
அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய அவர் கடைசியில் அதிரடியாக ஃபினிஷிங் செய்யாமல் 58 (44) ரன்களில் 131.82 என்ற சாதாரண ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார். இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் சொந்த சாதனைக்காக சுயநலத்துடன் பேட்டிங் செய்தார் என்று பலரும் விமர்சித்திருப்பார்கள் என இர்பான் பதான் மற்றும் முகமது கைப் கடுமையாக சாடியுள்ளனர்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பதான் பேசியது பின்வருமாறு. “நீங்கள் என்ன சொன்னாலும் இப்போட்டியில் பவுலிங் நன்றாக இருந்தது. இங்கே அனைத்து வீரர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார். அப்போது முகமது கைப் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சொல்வது சரி. ஒருவேளை இது விராட் கோலியாக இருந்திருந்தால் 44 பந்தில் வெறும் 58 ரன்கள் தானா? என்ன இது? என்பது போல் பலரும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசியிருப்பார்கள்”
இதையும் படிங்க: முழுசா சொல்லமுடியாது 10 மணியை பாருங்க.. 4 ஸ்பின்னர்கள் எதற்கு? ஸ்ரீகாந்த் கேள்விக்கு ரோஹித் பதில்
“ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். பிட்ச் கடினமாக இருந்தது. இருப்பினும் அவருடைய ஆட்டம் போட்டியை மாற்றியது” என்று கூறினார். இறுதியாக மீண்டும் பதான் பேசியது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக விராட் கோலி இருந்திருந்தால் இந்நேரம் பலரும் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் இங்கே தான் நாம் அணிக்காக பொறுப்புடன் விளையாடுவதைப் பற்றி பேசுகிறோம். எனவே அனைத்து வீரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்” என்று கூறினார்.