மோசமான காயத்திலிருந்து அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் – விக்கெட்டையும் காப்பாற்றி அசத்தல்

Johnson Charles
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வருடம் தோறும் நடைபெற்று வரும் பிரபலமான கரீபியின் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. அதில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் திரிபாங்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா 20 ஓவர்களில் 167/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 57 (36) ஜான்சன் சார்லஸ் 37 (31) சிக்கந்தர் ராசா 32 (23) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

நைட் ரைடர்ஸ் சார்பில் அதிகபட்சமாக ரசல் மற்றும் ட்வயன் ப்ராவோ தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய நைட் ரைடர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்டில் 7 (8) வால்டன் 0, நிக்கோலஸ் பூரான் 0, ட்வயன் ப்ராவோ 1 என நட்சத்திர அதிரடி வீரர்கள் எதிரணியின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் தொடக்க வீரர் டேயல் 33 (19) ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 34 (15) ரன்களும் எடுத்து அதிரடியாக விளையாடிய போதிலும் 14.5 ஓவரில் அந்த அணி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

தப்பிய நட்சத்திரம்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய செயின்ட் லூசியா சார்பில் அதிகபட்சமாக காரி பேரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அப்படி ஒரு தலைப்பட்சமாக நடைபெற்ற முடிந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா அணிக்கு நட்சத்திர தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக விளையாட முயற்சித்துக் கொண்டிருந்த போது ட்வயன் ப்ராவோ வீசிய 12வது ஓவரின் 4வது பந்தில் வித்தியாசமான ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்தார்.

குறிப்பாக ப்ராவோ வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தை அப்படியே லாவகமாக பேட்டை அடியில் விட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு பின்னே சிக்ஸராக அடிக்க முயற்சித்த அவருடைய எண்ணம் இறுதியில் அவருக்கே பெரிய அடியை கொடுத்தது. ஏனெனில் பெரிய அளவில் பவுன்ஸாகி வராத காரணத்தால் அவருடைய பேட்டில் பட்ட பந்து நேராக அவருடைய தாடை பகுதியில் சென்று வலுவாக அடித்தது. குறிப்பாக பாதுகாப்புக்காக பூட்டப்பட்டிருந்த ஹெல்மெட் அவிழ்த்துக்கொண்டு கீழே விழும் அளவுக்கு பேட்டில் பட்டு வந்த பந்து அவருடைய தாடை பகுதியில் பட்டது.

- Advertisement -

ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ஹெல்மெட் கம்பிகளில் பட்டதால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் பந்து பட்ட வேகத்தில் ஹெல்மெட் தாமாக கழன்று கொண்டு ஸ்டம்ப்பில் மீது மோதுவதற்காக சென்றது. ஆனால் அந்த சமயத்தில் காயத்திலிருந்து தப்பிய அவர் அதற்காக மகிழ்ச்சியடையாமல் அவுட்டாகி விடுவோமா என்ற அச்சத்தில் பின்னோக்கி சென்ற ஹெல்மெட்டை தம்முடைய ஒற்றை காலால் தட்டி விட்டு அவுட்டாவதை தவிர்த்தார்.

இதையும் படிங்க:தற்போதைக்கு இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்காததது சரியான முடிவு தான் – டேனிஷ் கனேரியா கருத்து

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்த அந்த தருணத்தில் ஹெல்மெட் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிச்சயமாக அவர் பெரிய அளவில் காயத்தை சந்தித்திருப்பார் என்று சொல்லலாம். அதனாலேயே பந்து வீசிய ப்ராவோ அவருடைய அருகில் சென்று நலம் விசாரித்த பின் போட்டி மீண்டும் நடைபெற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement