தற்போதைக்கு இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்காததது சரியான முடிவு தான் – டேனிஷ் கனேரியா கருத்து

Kaneria
- Advertisement -

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியானது பிசிசிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்ட வீரர்களே பெரும்பாலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்பார்கள் என்பதனால் இந்த அறிவிப்பின் மீது பலரது பார்வையும் இருந்தது. இந்நிலையில் வெளியான அறிவிப்பின்படி சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியது.

Asia-Cup

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்படாதது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாஹல் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் இதுவரை 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அதன் காரணமாக அவருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

Kuldeep-and-Chahal

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா யுஸ்வேந்திர சாஹல் தற்போதைக்கு இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டியவர் கிடையாது என தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் தற்போதைய அணிக்கு அவர் பொருந்தக்கூடியவராக தெரியவில்லை. ஏனெனில் அக்சர் பட்டேல் பந்துவீசுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்க முடியும். அதனால் 17 பேர் கொண்ட இந்திய அணியில் சாஹலை தேர்வு செய்வது கடினம்.

இதையும் படிங்க : 2023 உலக கோப்பை : உங்களோட ப்ளானிங் சிறப்பா இருக்கு, டிராவிட் – ரோஹித்தை பாராட்டிய சஞ்சய் பங்கர், காரணம் இதோ

தற்போதைக்கு என்னை பொறுத்தவரை சாஹலை விட குல்தீப் யாதவ் சற்று உயர்வாக தான் இருக்கிறார். ஏனெனில் குல்தீப் யாதவ் போன்றோரின் தனித்துவமான பந்துவீச்சு பேட்ஸ்மன்களுக்கு சிரமம் அளிக்கக் கூடியது. எனவே இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் தற்போது சரியான முடிவை தான் எடுத்துள்ளனர் என்று டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement