2023 உலக கோப்பை : உங்களோட ப்ளானிங் சிறப்பா இருக்கு, டிராவிட் – ரோஹித்தை பாராட்டிய சஞ்சய் பங்கர், காரணம் இதோ

Sanjay bangar
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. விரைவில் துவங்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இதுவரை நிலவும் ஓரிரு பிரச்சனைகளையும் சரி செய்து உலகக்கோப்பைக்கு தேவையான 15 பேர் கொண்ட இறுதிக்கட்ட அணியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

IND vs PAK World Cup

- Advertisement -

அந்த வகையில் பார்க்கும் போது தற்சமயத்தில் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்ற காயத்தை சந்தித்திருந்த முக்கிய வீரர்கள் குணமடைந்து ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது பாதி பிரச்சனையை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 2011 உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் தற்போதைய மிடில் ஆர்டரில் இல்லாதது முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

சரியான பிளானிங்:
அதை தீர்ப்பதற்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக விட்டாலும் பரவாயில்லை என்று 20 வயதாகும் திலக் வர்மா நேரடியாக இந்த ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இதுவரை பெரிய அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவருக்கு நேரடியாக உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று நிறைய எதிர்ப்புகள் காணப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் குழுவாகப் பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

Shreyas Iyer

அதில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பயிற்சிகளை செய்த நிலையில் ரோஹித் சர்மா – விராட் கோலி, சுப்மன் கில் – ஸ்ரேயாஸ் ஐயர் என பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ஜோடியாக பேட்டிங் செய்தனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த பயிற்சி வீடியோக்களை பார்த்த முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால் அதை சமாளித்து ஈடு கொடுக்கும் வகையில் இந்த பயிற்சிகள் இருப்பதாக ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மாவை பாராட்டினார்.

- Advertisement -

குறிப்பாக 5வது இடத்தில் முன்கூட்டியே இடது கை பேட்ஸ்மேன் வரும் அளவுக்கு இந்த திட்டம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் – சுப்மன் கில் ஆகியோர் ஜோடியாக பேட்டிங் செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி விட்டால் ஸ்ரேயாஸ் – கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிலைமையை சமாளிப்பதற்காக இப்போதே வகுக்கப்படும் திட்டமாகும்”

Bangar

இதையும் படிங்க:2023 உ.கோ : அய்யா அந்த 3டி பிளேயர மறந்துட்டீங்க, எம்எஸ்கே பிரசாத்தை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள் – காரணம் இதோ

“அல்லது நம்பர் 4 பேட்ஸ்மேன் முன்கூட்டியே பெவிலியன் திரும்பி விட்டால் களத்தில் இருக்கும் விராட் கோலியுடன் முன்கூட்டியே ஒரு இடது கை பேட்ஸ்மேனை ஜோடி சேர்ந்து விளையாட வைக்கும் திட்டமாகும். இது வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கு உதவும். இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் நீண்ட காலம் ஒன்றாக விளையாடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பயிற்சியின் போது இதை செய்து பார்ப்பது நல்ல அம்சமாகும்” என்று கூறினார்.

Advertisement