2023 உ.கோ : அய்யா அந்த 3டி பிளேயர மறந்துட்டீங்க, எம்எஸ்கே பிரசாத்தை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள் – காரணம் இதோ

- Advertisement -

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு திருவிழாவான ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோத உள்ளன. அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்திக்கும் தோல்விகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக களமிறங்கப் போகும் 15 பேர் கொண்ட தங்களுடைய உத்தேச அணியை சௌரவ் கங்குலி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் 2019 உலக கோப்பையை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தம்முடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தார். அதில் யாருமே கண்டுக் கொள்ளாத தமிழகத்தின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற காரணத்திற்காக தேர்வு செய்தது வியப்பாக அமைந்தது.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்கள்:
அதை தவிர்த்து வழக்கமான இதர வீரர்களை தேர்வு செய்து அவருடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை பார்த்த ரசிகர்கள் இதில் 3டி பிளேயர் எங்கே என கலாய்த்து வருகிறார்கள். அதாவது 2019 உலகக்கோப்பையில் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்த ராயுடுவை கடைசி நேரத்தில் முப்பரிணிமான வீரர் தேவை என்ற நோக்கத்துடன் கழற்றி விட்ட அவர் ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் விளையாடாத தமிழகத்தின் விஜய் சங்கரைத் தேர்வு செய்தார்.

மறுபுறம் ஆவலுடன் காத்திருந்த வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமடைந்த ராயுடு உலக கோப்பையை பார்க்க 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளதாக ட்விட்டரில் வேதனையுடன் பதிவிட்டார். அந்த நிலையில் வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர் ஓரளவு மட்டுமே சுமாராக செயல்பட்டு காயமடைந்து வெளியேறிய நிலையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் முதலாவதாக காத்திருந்த ராயுடுவை “3டி ட்வீட்” போட்டதற்காக பழி வாங்க நினைத்த எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு அவரை இங்கிலாந்துக்கு அனுப்பாமல் மயங் அகர்வாலை அனுப்பி பழி தீர்த்தது.

- Advertisement -

அதன் பின்பும் அளவில் வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டதால் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். மறுபுறம் அன்று எம்எஸ்கே பிரசாத் செய்த அந்த தவறு இன்று 4 வருடங்கள் 2023 உலகக் கோப்பையில் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கான சரியான வீரர் கிடைக்காமல் இந்திய அணியில் திண்டாட வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:வீடியோ : ராஞ்சியில் தனது ஜிம் நண்பர்களுடன் கேக் வெட்டி திடீர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தல தோனி – எதற்கு தெரியுமா?

குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் தவிர்த்து அந்த இடத்தில் விளையாடுவதற்கு சரியான அனுபவமிக்க மாற்று வீரர் கூட இந்திய அணியில் இல்லை. ஒருவேளை இப்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் மீண்டும் காயமடைந்தால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement