ராஞ்சியில் தனது ஜிம் நண்பர்களுடன் கேக் வெட்டி திடீர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தல தோனி – எதற்கு தெரியுமா?

MS-Dhoni
Advertisement

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெரும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 16-வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் ஒவ்வொரு ஆண்டுமே ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை.

அதிலும் குறிப்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இத்தனை ஆண்டுகளாகவும் தொடர்ச்சியாக தங்களது ஆதிக்கத்தை ஐபிஎல் தொடரில் செலுத்தி வருகிறது. குறிப்பாக அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையையும் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎஸ் தொடரில் வெற்றி பெற்று சென்னை அணி சமன் செய்திருந்தது.

- Advertisement -

சூதாட்ட புகார் காரணமாக இடையில் சில ஆண்டுகள் சென்னை அணி தடை பட்டிருந்தாலும் இன்றளவும் மற்ற அணிகளுக்கு சவாலளிக்கும் வகையில் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் வீரர்கள் அனைவருமே தோனிக்காக இந்த கோப்பையை அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தனர். அது குறித்த பல சுவாரசியமான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இதையும் படிங்க : அஷ்வினுக்கு இடமிருக்கு, தனது அட்டகாசமான 2023 உ.கோ 15 பேர் இந்திய அணியை வெளியிட்ட எம்எஸ்கே பிரசாத் – விவரம் இதோ

இந்நிலையில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றிய நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தோனி ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கும் ஜிம்மில் தனது நண்பர்களுடன் இந்த வெற்றியை கொண்டாடி கேக் வெட்டி மகிழ்ந்தார். தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement