அஷ்வினுக்கு இடமிருக்கு, தனது அட்டகாசமான 2023 உ.கோ 15 பேர் இந்திய அணியை வெளியிட்ட எம்எஸ்கே பிரசாத் – விவரம் இதோ

MSK Prasad 3
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. அதில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்தே உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படும் என்பதால் அந்த தொடரில் இடம் பெறாத வீரர்கள் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணிகளை நட்சத்திர முன்னாள் இந்திய வீரர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.

அஷ்வினுக்கு இடம்:
குறிப்பாக சௌரவ் கங்குலி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் தேர்வு செய்த நிலையில் தற்போது 2019 உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது அணியை வெளியிட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியிலான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் தேர்வு செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆசிய கண்டத்தில் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் சவாலை கொடுப்பார் என்று கடந்த வாரமே தெரிவித்திருந்த அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் மீண்டும் உறுதியாக இந்த அணியை தேர்வு செய்துள்ளார்.

Ravichandran Ashwin

இருப்பினும் ஒரு காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே நிலையான இடம் கிடைப்பதில்லை. அந்த நிலையில் கடந்த 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் கழற்றி விடப்பட்டுள்ள அஷ்வினுக்கு ஆசிய கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் உண்மையான உலகக் கோப்பை அணியில் இடம் கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சஞ்சு சாம்சனை கண்டுகொள்ளாமல் இசான் கிசானை பேக்-அப் வீரராக தேர்வு செய்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டுள்ள சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஸ்பின்னராக சஹால் அல்லது குல்தீப் யாதவ் விளையாடுவார்கள் என இருவரையுமே சேர்ந்தால் போல் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். மற்றபடி காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தம்முடைய அணியில் தேர்வு செய்துள்ள அவர் இதர முக்கிய வீரர்களை வழக்கம் போல தேர்ந்தெடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பை தொடருக்காக எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ள இந்திய அணி இதோ:

Prasad

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவின் பிட்னஸ் எந்த வகையிலும் இந்திய அணியை பாதிக்காது – அதற்கான 2 காரணங்கள் இதோ

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவஸ்வேந்திர சஹால்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமத் ஷமி, இஷான் கிசான்.

Advertisement