ரோஹித் சர்மாவின் பிட்னஸ் எந்த வகையிலும் இந்திய அணியை பாதிக்காது – அதற்கான 2 காரணங்கள் இதோ

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரிலும், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. 36 வயதான ரோகித் சர்மா இந்த இரண்டு தொடர்களிலும் கடைசியாக கேப்டன்சி செய்ய உள்ளார் என்றே கூறலாம். ஏனெனில் மற்ற இந்திய வீரர்களை போன்று பிட்னஸில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருக்கும் ரோகித் சர்மா காயம் மற்றும் ஓய்வு காரணமாக சமீபத்தில் பல்வேறு போட்டிகளை தவற விட்டுள்ளார்.

Rohit-1

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் அவரே இந்திய அணியை வழிநடத்தவும் இருக்கிறார். இந்திய அணியின் மற்ற வீரர்களை போன்று பிட்னஸில் பெரிய அளவில் கவனம் செலுத்தாத அவர் நடைபெற்று முடிந்த யோ யோ டெஸ்டிலும் தேர்வு பெற்றுள்ளதால் அடுத்து வரும் இரண்டு பெரிய தொடர்களில் கேப்டன்சி செய்ய உள்ளார்.

இந்நிலையில் பெரிய அளவில் ரோகித் சர்மா பிட்னஸில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவரது இருக்கை இந்திய அணிக்கு பாதகம் இல்லை என்ற இரண்டு முக்கிய சாதகங்கள் அவரின் பக்கம் பார்க்கப்படுகின்றன. அது குறித்த இரண்டு குறிப்புகளை நாம் இங்கு காணலாம். அந்த வகையில் 1) அவரது பேட்டிங் பீல்டிங் குறைபாடுகளை விட சிறப்பாக இருப்பது ஒரு காரணம் : அதன்படி ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா போன்று பிட்டாக இல்லை என்றாலும் இதுபோன்ற ஒருநாள் போட்டிகளில் 100 ஓவர்கள் விளையாடும் அளவிற்கு அவரிடம் உடற்தகுதி உள்ளது.

Rohit Sharma 2

அதோடு ரோகித் சர்மா போன்ற ஒரு கேப்டன் மற்றும் சீனியர் வீரர் அணியில் இருக்கும்போது அவர் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய விரும்புகிறாரோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்யும் தன்மையுடையவர் அவர் களத்தில் நின்றால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியும். அதனை அவர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் செய்தும் காண்பித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் 200 ரன்களுக்கு மேல் அவர் மூன்று முறை அடித்தது மட்டுமின்றி 150 ரன்களுக்கு மேல் பலமுறை அடித்துள்ளார் அது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2) முப்பது யார்டு சர்க்குலுக்குள் மட்டுமே பீல்டிங் செய்பவர் : இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா 30 யார்டு சர்க்கிளில் மட்டுமே பீல்டிங் செய்பவர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த டாப் 4 அதிரடி பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

எப்போதாவது ஒருமுறைதான் அவரை பவுண்டரி லைனில் பார்க்க முடியும். எனவே அவரது பிட்னஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படாது. இளம் வீரர்களை பவுண்டரி லைனில் நிற்க வைத்தால் நிச்சயம் ரோகித் சர்மா சர்க்கிளில் தான் இருப்பார். எனவே அவ்வாறு அவர் நின்று பீல்டிங் செய்யும்போது எந்த ஒரு பிரச்சனையும் அணிக்கு வராது எனவே அவரது இருக்கை இந்திய அணிக்கு எந்த ஒரு வகையிலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement