இங்கேயும் சண்டையா, உள்ளூர் டி20 தொடரில் இந்திய வீரர்கள் மோதல் – காரணம் என்ன?

Ambati Rayudu Fight
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டக் அலி 2022 கோப்பை தொடர் அக்டோபர் 11ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கியது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் ஏற்கனவே 3 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் திகழும் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அத்துடன் “இம்பேக்ட் பிளேயர்” என்ற பெயருடன் சமீபத்தில் பிசிசிஐ அறிமுகப்படுத்திய புதிய விதிமுறையும் இந்த தொடரில் முதல் முறையாக அமலுக்கு வந்துள்ளது.

அந்த நிலையில் இந்த தொடரில் அக்டோபர் 12ஆம் தேதியன்று எலைட் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள சௌராஷ்டிரா மற்றும் பரோடா ஆகிய அணிகள் மோதின. இந்தூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பரோடா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 175/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் மிதேஷ் படேல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 60 (35) ரன்களும் 3வது இடத்தில் களமிறங்கிய விஷ்ணு சோலங்கி 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (33) ரன்களும் குவிக்க இறுதியில் பனு பானியா 26* (10) ரன்கள் விளாசி பினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

இங்கேயும் சண்டை:
அதைத் தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சௌராஷ்டிரா அணிக்கு நட்சத்திர தொடக்க வீரர் புஜாரா 14 (18) ரன்களில் அவுட்டான நிலையில் 3வது இடத்தில் களமிறங்கி பரோடா பவுலர்களை புரட்டி எடுத்து பந்தாடிய சமர்த் வியாஸ் 5 பவுண்டரி 9 சிக்சருடன் வெற்றியை உறுதி செய்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 97 (57) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் திரும்பினார். எஞ்சிய பேட்ஸ்மேன்கள் 20 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் அவரது அதிரடியால் 19.4 ஓவரில் 178/6 ரன்களை எடுத்த சவுராஷ்டிரா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முன்னதாக இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு ஹைதராபாத் நகரிலிருந்து பரோடா நகருக்கு குடிபெயர்ந்து அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த நிலையில் இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டான அவர் சௌராஷ்டிரா பேட்டிங் செய்த போது 4வது களமிறங்கிய செல்டன் ஜாக்சன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது கேப்டனாக கவர் திசையில் தன்னுடைய அணியின் பீல்டிங்கை செட்டிங் செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நடுவரிடம் புகார் அளித்துக் கொண்டே சண்டையில் ஈடுபடுவதற்காக ராயுடு அருகே சென்றார். ஆனால் உடனடியாக உள்ளே புகுந்த அம்பயர் மற்றும் இரு அணிகளைச் சேர்ந்த இதர வீரர்கள் சண்டையை பெரிய அளவில் வரவிடாமல் தடுத்தார்கள். ஆனால் எதன் காரணமாக இந்த சண்டை வந்தது என்பது தெரியாமல் நடுவரும் ரசிகர்களும் குழம்பிய போது தங்களது அணி பவுலர்களை கடுப்பேற்றும் வகையில் பந்தை எதிர்கொள்வதற்கு செல்டன் ஜாக்சன் அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்ட காரணத்தாலேயே அம்பத்தி ராயுடு கோபமடைந்து நடுவரிடம் புகார் செய்து அதிருப்தியுடன் சண்டை போடச் சென்றதாக வர்ணனையாளர்கள் தெளிவு படுத்தினர்.

இறுதியில் அந்த சண்டை பெரிய அளவில் வராத நிலையில் போட்டி சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இருப்பினும் இந்திய வீரர்களுக்குள் இப்படி ஒரு மோதல் ஏற்பட்டது சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதில் 2018 வாக்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு இந்தியாவுக்காக 2019 உலக கோப்பையில் விளையாட காத்திருந்த நிலையில் தேர்வுக்குழு அதிரடியாக கழற்றி விட்டது.

- Advertisement -

அதனால் 3டி ட்வீட் போட்ட அவரை பழி வாங்கிய தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டதால் விரக்தியடைந்த ராயுடு 33 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்து ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : என்னையா திட்றிங்க, டி20 உ.கோ’யில் மிரட்டுவதற்கு 2 பிளான் வெச்சுருக்கேன் – இந்திய பவுலர் அதிரடி

மறுபுறம் இந்தியாவுக்காக விளையாடும் முயற்சியில் போராடி வரும் செல்டன் ஜாக்சன் 35 வயதை கடந்து விட்ட காரணத்துக்காக தமக்கு தேர்வுக்குழு வாய்ப்பளிக்காமல் இழுத்தடிப்பதாக சமீபத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனாலும் மனம் தளராமல் போராடி வரும் அவருக்கு பதிலாக நிறைய இளம் வீரர்கள் இருப்பதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை கடைசி வரை பெறாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement