என்னையா திட்றிங்க, டி20 உ.கோ’யில் மிரட்டுவதற்கு 2 பிளான் வெச்சுருக்கேன் – இந்திய பவுலர் அதிரடி

INDIA Arshdeep Singh Harshal Patel
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்னும் 4 நாட்களில் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா உலகின் நம்பர்-1 அணியாக களமிறங்குகிறது. இருப்பினும் அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வி பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணமாக இருந்த சுமாரான “டெத் பவுலிங்” இன்னும் முன்னேறாமலேயே இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கவலையாக இருக்கிறது.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

போதாகுறைக்கு பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை அனைத்து நேரங்களிலும் கச்சிதமாக பந்து வீசி வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது முதல் அடியிலேயே இந்தியாவுக்கு சறுக்கலை கொடுத்துள்ளது. ஏனெனில் அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட்டுள்ள பவுலர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக இருக்கின்றனர். இதில் புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் கூட புதிய பந்தை ஸ்விங் செய்து பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றும் திறமை பெற்றுள்ளனர்.

என்னையா திட்றிங்க:
ஆனால் ஐபிஎல் 2021 தொடரில் ஊதா தொப்பியை வென்றதால் இந்தியாவுக்காக அறிமுகமாகி பெரும்பாலும் கட்டர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை மட்டுமே நம்பிக்கொண்டு 120 – 130 வேகத்தில் வீசும் ஹர்ஷல் படேல் ஆரம்பத்தில் அசத்தினாலும் நாட்கள் செல்ல செல்ல பெரும்பாலான போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி வருகிறார். அதிலும் 2022இல் மொத்தமாக 500+ ரன்களை வழங்கிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் மற்றும் சிக்ஸர்களை வழங்கிய பவுலர் ஆகிய 2 மோசமான உலக சாதனைகளை படைத்தார்.

Harshal-Patel

அதனால் ஆரம்பத்தில் இவர் இல்லாததால் ஆசிய கோப்பையில் தோற்றோம் என்று நினைத்து வருந்திய இந்திய ரசிகர்கள் அக்டோபர் 10இல் நடைபெற்ற மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் முன்னேறாமல் 49 ரன்களை வழங்கியதால் உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக கோப்பையில் அசத்துவதற்கு சில திட்டங்களை தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கும் ஹர்ஷல் படேல் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை சமாளிக்கவும் திட்டம் வைத்துள்ளதாக தெம்பாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னிடம் 2 திட்டங்கள் உள்ளன. இரண்டுமே ஆஃப் கட்டர்களாகும். அவை பிட்ச் எனக்கு இயற்கையாகவே உதவுமா இல்லையா என்பதைப் பொறுத்து மாறுபடும். ஒருவேளை பிட்ச் எனக்கு உதவவில்லை என்றால் நான் முன்னங்கையிலிருந்து பந்து வீசுவேன். ஏனெனில் அது டாப் ஸ்பின் போன்ற வடிவத்தை ஏற்படுத்தும். அந்த பந்துகள் பவுன்ஸ் உள்ள பிட்ச்களில் இன்னும் அதிகமாக வேலை செய்யும். மேலும் அந்தப் பந்துகள் அடிப்பதற்கு தேவையான நேரத்தை பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்காமல் காற்றில் அடிக்க வைக்கும். அதுவும் பிளாட்டாக செல்லாமல் உயரே (கேட்ச்) செல்லும்”

Harshal

“குறிப்பாக விராட் கோலி போன்றவர்களுக்கு எதிராக கண்டிப்பாக வேலை செய்யும். ஏனெனில் அவர் அதிரடியாக அடிக்க மாட்டார். மேலும் இந்த ஸ்லோயர் பந்துகள் முரட்டுத்தனமாக அடிப்பவர்களுக்கு எதிராக அற்புதமாக வேலை செய்யும். அத்துடன் விராட் கோலிக்கு எதிராக இந்த மாதிரியான பந்தை பயன்படுத்திய போது அவர் இறங்கி வந்து ஃபுல் டாஸாக மாற்றி மிட் விக்கெட் திசையில் அடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் சரியாக அடித்தால் லாங் – ஆன் அல்லது மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அல்லது 2 ரன்கள் எடுக்க முடியும்”. “எனவே அவரைப்போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் உங்களது பந்துகளை சற்று மாற்ற வேண்டும். ஆனால் க்ரீஸ்’க்கு உள்ளே நின்று உங்களை அதிரடியாக அடிக்கும் பேட்ஸ்மென்கள் நிச்சயமாக இந்த பந்துகளில் தடுமாறுவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : முதல் முறையாக விளையாடினாலும் ஆஸ்திரேலியாவில் அசத்தப்போறாரு பாருங்க – இந்திய ஸ்டாரை பாராட்டும் டேல் ஸ்டைன்

ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்து கொண்டு ஒரு ஸ்பின்னரை போல் ஸ்லோயர், ஸ்பின் பந்துகளை ஸ்பெஷல் திட்டமாக வைத்து உலக கோப்பை விளையாடப்போகும் இவர் ஆஸ்திரேலிய மைதானங்களில் எந்தளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement