இங்கயும் சொதப்பலா? 20 பந்தில் 3 அல்வா கேட்ச்களை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் – தக்க பதிலடி கொடுத்த நேபாள்

Dropped Catches
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடி இந்தியாவை மழை வந்து மொத்தமாக தடுத்தது. அதனால் அப்போட்டியில் 1 புள்ளியை மட்டுமே பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்று தகுதி பெற செப்டம்பர் 4 ஆம் தேதி இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் நேபாளை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து நேபாள் கத்துக்குட்டியாக இருப்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து இந்தியா மிரட்டலான துவக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் முகமது ஷமி முதல் ஓவரின் கடைசி பந்தில் நேபாள் தொடக்க வீரர் புர்டேல் தெளிவான எட்ஜ் கொடுத்தார். ஆனால் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த தம்மை நோக்கி அல்வா போல வந்த அந்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் தவற விட்டார்.

- Advertisement -

3 கேட்ச் ட்ராப்:
அந்த நிலைமையில் முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மற்றொரு தொடக்க வீரர் ஆசிப் சேக் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனாலும் தவறாக கணித்ததால் கேட்ச்சாக மாறிய அந்த பந்தை ஷார்ட் கவர் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி அசால்டாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே டிராப் செய்து கோட்டை விட்டார். இந்திய அணியில் மிகச்சிறந்த ஃபீல்டராக கருதப்படும் அவர் அப்படி மிகவும் எளிதாக தம்முடைய கைகளுக்கு வந்த பங்கை பிடிக்காமல் விட்டது ரசிகர்களுக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகும் அமைந்தது.

அதை விட முகமது ஷமி வீசிய 5வது ஓவரின் 2வது பந்தில் மீண்டும் புர்டேல் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இருப்பினும் மீண்டும் அதை அவர் தவறாக கணித்ததால் எட்ஜ் வாங்கிய பந்து நேராக விக்கெட் கீப்பர் இசான் கிசான் கைகளுக்கு சென்றது. ஆனால் கைகளுக்கு வந்த அந்த பந்தை இஷான் கிசானும் பிடிக்காமல் விட்டு பவுண்டரி கொடுத்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மொத்தத்தில் உலக அரங்கில் டாப் அணியாக கருதப்படும் இந்தியா கத்துக்குட்டியான நேபாளுக்கு எதிராக முதல் 20 பந்துகளுக்குள் 3 கேட்ச்களை விட்டதை பார்த்த ரசிகர்கள் இங்கேயும் திணறலா? என அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க: நேபாளுக்கு எதிரா ரன் அடிக்கலைன்னா அவர தூக்கிடுங்க இஷானுக்கு சான்ஸ் கொடுங்க – சுனில் கவாஸ்கர் அதிரடி பேட்டி

மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக விளையாடும் நேபாளுக்கு இந்த அல்வா வாய்ப்புகளை பயன்படுத்திய ஓப்பனிங் ஜோடி 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. அந்த வகையில் இந்தியா கேட்ச்களை விட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட அந்த ஜோடியில் ஒரு வழியாக சர்துள் தாக்கூர் வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் புர்டேல் 38 (25) ரன்களில் கொடுத்த கேட்ச்சை 2வது வாய்ப்பில் இசான் கிசான் சரியாக பிடித்ததால் அவுட்டாகி சென்றார். அதனால் சற்று முன் வரை நேபாள் 14 ஓவரில் 69/1 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement