நேபாளுக்கு எதிரா ரன் அடிக்கலைன்னா அவர தூக்கிடுங்க இஷானுக்கு சான்ஸ் கொடுங்க – சுனில் கவாஸ்கர் அதிரடி பேட்டி

Sunil Gavaskar 6
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பையில் களமிறங்கும் போகும் இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த சூழ்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவது சரியான முடிவல்ல என சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர்.

அதற்கேற்றார் போல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டான போது களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடி காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். மறுபுறம் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்ற இசான் கிசான் 66/4 என இந்தியா சரிந்த சமயத்தில் பாண்டியாவுடன் சேர்ந்து 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 82 ரன்கள் குவித்து இந்தியா 266 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

நேபாளுக்கு எதிராக:
குறிப்பாக பெரும்பாலும் துவக்க வீரராக களமிறங்கி வெற்றிகரமாக செயல்பட்ட அவர் அழுத்தமான மிடில் ஆர்டரில் பாகிஸ்தானின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சிறப்பாக எதிர்கொண்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இருப்பினும் கேஎல் ராகுல் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியில் 82 ரன்கள் அடித்த இஷான் கிஷானை நீக்கக்கூடாது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் ஒருவேளை நேபாளுக்கு எதிரான போட்டியிலும் ரன்கள் எடுக்காமல் போனால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கலாம் என அதிரடியாக பேசியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேபாளுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க நான் காத்திருக்கிறேன். ஒருவேளை அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஏனெனில் நேபாளுக்கு எதிராக நம்முடைய டாப் 3 பேட்ஸ்மேன்களே 40 ஓவர்கள் வரை விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது”

- Advertisement -

“இறுதியில் அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் பெரிய அளவில் ரன்கள் எடுக்காத பட்சத்தில் நான் 4, 5 ஆகிய இடங்களில் கேஎல் ராகுல், இஷான் கிசான் ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் நீங்கள் முக்கியமான போட்டியில் 80 ரன்கள் அடித்த ஒருவரை நீக்குவது நியாயமானதாக இருக்காது. மேலும் இஷான் கிசான் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் இந்திய பேட்டிங் வரிசையில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவராக இருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: விளையாட்டில் மன்னிக்க முடியாத அரசியல் செய்யும் உங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் – ஜெய் ஷா’வை தாக்கிய நஜாம் சேதி

இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட ஏற்கனவே ஓரளவு ஃபார்மில் இருந்த நிலையில் கேஎல் ராகுல் தடவலாக பேட்டிங் செய்து பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்தார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் போலவே காயத்திலிருந்து குணமடைந்து வரும் ராகுலும் சூப்பர் 4 சுற்றில் விளையாடினால் நிச்சயம் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிசான் யாருக்காகவும் நீக்கப்படாமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement