விளையாட்டில் மன்னிக்க முடியாத அரசியல் செய்யும் உங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் – ஜெய் ஷா’வை விளாசிய நஜாம் சேதி

Jay Shah Najam Sethi
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் இதுவரை இலங்கை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக இந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை கடந்த வருடம் புதிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையிலான கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் பாகிஸ்தான் பெற்றது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று அறிவித்த ஜெய் ஷா இத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுப்போம் என கூறினார். அதற்கு எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இறுதியில் பாகிஸ்தான் விளையாடும் 4 போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய ஆசிய கவுன்சில் பணக்கார வாரியமாக இருக்கும் இந்தியாவை பகைத்து கொள்ளாமல் அந்த அணி விளையாடும் போட்டிகளையும் ஃபைனலையும் இலங்கையில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தது.

- Advertisement -

விளையாட்டில் அரசியல்:
இருப்பினும் பாகிஸ்தானில் போட்டிகள் எவ்விதமான தடையில்லாமல் முழுவதுமாக நடக்கும் நிலையில் இலங்கையில் மழைக்காலம் என்பதால் அங்கு நடைபெறும் அனைத்து போட்டிகள் தடைபட்டு வருகிறது. குறிப்பாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி அனல் பறந்த தருணங்களுக்கு மத்தியில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கொழும்பு நகரில் தற்போது வெள்ளம் ஓடும் அளவுக்கு மழை பெய்து வருவதால் அங்கு நடைபெறவிருக்கும் முக்கியமான சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் செப்டம்பர் 10இல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட கொழும்புவில் நடைபெறவிருக்கும் சூப்பர் 4 போட்டிகளை தம்புலா அல்லது கண்டி நகரத்துக்கு மாற்ற ஆசிய கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விளையாட்டில் அரசியலை கொண்டு வந்து தங்களுடைய நாட்டில் 2008க்குப்பின் முதல் முறையாக நடைபெறும் ஆசிய கோப்பையை முழுமையாக நடத்த விடாமல் செய்த ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா’க்கு இந்த பின்னடைவு தேவை தான் என முன்னாள் பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இத்தொடரை துபாயில் நடத்தலாம் என்று பரிந்துரைத்தும் அங்கு அதிக வெயில் இருக்கும் என்று ஜெய் ஷா மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரை மட்டும் ஜெய் ஷா அங்கு நடத்துவதற்கு சம்மதித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பெரிய ஏமாற்றம். கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் இது முன்கூட்டியே கணிக்கப்பட்டது”

இதையும் படிங்க: எதோ அதிர்ஷ்டத்தால் தப்பிச்சுட்டீங்க, அடுத்த மேட்ச்ல அவங்க 2 பேரும் பொளக்க போறாங்க – பாகிஸ்தானுக்கு ஸ்ரீசாந்த் எச்சரிக்கை

“அதனால் நான் பாகிஸ்தான் வாரிய தலைவராக இருந்த போது இத்தொடரை துபாயில் நடத்தலாம் என்று ஆசிய கவுன்சிலிடம் வலியுறுத்தினேன். ஆனால் இலங்கைக்கு இடமளிக்க மோசமான சாக்குகள் சொல்லப்பட்டன. குறிப்பாக துபாயில் வெப்பம் அதிகமாக உள்ளது என்றார்கள். ஆனால் அங்கு கடந்த செப்டம்பர் 2022இல் ஆசிய கோப்பை விளையாடிய போதும் 2014 ஏப்ரல் மற்றும் 2020 செப்டம்பரில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் மட்டும் சூடாக இல்லை. விளையாட்டுக்கு மேல் அரசியல் இருப்பது மன்னிக்க முடியாதது” என்று கூறினார்.

Advertisement