எதோ அதிர்ஷ்டத்தால் தப்பிச்சுட்டீங்க, அடுத்த மேட்ச்ல அவங்க 2 பேரும் பொளக்க போறாங்க – பாகிஸ்தானுக்கு ஸ்ரீசாந்த் எச்சரிக்கை

Sreesanth
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவரில் 266 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குறிப்பாக நிறைய முன்னாள் வீரர்கள் சொன்னது போலவே சாகின் அப்ரிடிக்கு எதிராக திண்டாடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் கிளீன் போல்ட்டாகி ஆரம்பத்தில் பின்னடைவை கொடுத்தனர்.

அதே போல ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா 150 ரன்களை தாண்டுமா என இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி இஷான் கிசான் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 267 என்ற போராடினால் வெற்றி பெறக்கூடிய நல்ல இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்த இந்தியா ஒருவேளை மழை வராமல் இருந்து பந்து வீச்சில் அசத்தியிருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கலாம்.

- Advertisement -

உசுப்பேத்தும் ஸ்ரீசாந்த்:
முன்னதாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் முகமது அமீர், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ட்ரெண்ட் போல்ட், 2021 டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் சாகின் அப்ரிடி என அழுத்தமான போட்டிகளில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் திண்டாடுவதில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்பதை இப்போட்டி நிரூபித்தது.

அதனால் 2023 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் இந்தியா வெல்லுமா என்ற கவலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மீண்டும் வலுவாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போட்டியில் அதிர்ஷ்டவசமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்த பாகிஸ்தானை இதே தொடரின் சூப்பர் 4 சுற்றில் நிச்சயம் அந்த இருவரும் பந்தாடுவார்கள் என ஸ்ரீசாந்த் உசுப்பேத்தும் வகையில் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது இந்தியாவுக்கு துரதிஷ்ட வசமாக நடந்தது. குறிப்பாக இன்சைட் எட்ஜ் முறையில் விராட் கோலியின் விக்கெட்டை பாகிஸ்தான் அதிர்ஷ்டவசத்தால் பெற்றது. எனவே இதை ஒரு விக்கெட்டாகவே நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். மேலும் விராட் கோலியை பற்றி நன்கு தெரிந்த எனக்கு தம்முடைய விக்கெட்டை சாய்த்து பாகிஸ்தான் கொண்டாடிய போது அவர் என்ன நினைத்திருப்பார் என்பதும் தெரியும். அதனால் அடுத்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக நான் காத்திருக்கிறேன்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் அட்டாக்கையே சிதறடிச்ச அவருக்கு 2023 உ.கோ டீம்லயே சான்ஸ் கொடுக்கலாம் – வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி பாராட்டு

“அதே போல எப்போதுமே இடது கை பவுலர்களுக்கு எதிராக ரோகித் சர்மா தடுமாறுகிறார் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அனைத்தும் சாதகமாக நடக்கும். அப்போட்டியில் அவரும் விராட் கோலியும் நல்ல துவக்கத்தை பெற்றனர். குறிப்பாக விராட் கோலி அடித்த கவர் ட்ரைவை பார்த்த போது அவர் சதமடிப்பார் என்று எனக்கு தோன்றியது. எனவே அடுத்த போட்டியில் இடது கை பவுலர்களை அவர்கள் எவ்வாறு அடித்து நொறுக்குகிறார்கள் என்பதை காத்திருந்து பாருங்கள்” என கூறினார்.

Advertisement