பாகிஸ்தான் அட்டாக்கையே சிதறடிச்ச அவருக்கு 2023 உ.கோ டீம்லயே சான்ஸ் கொடுக்கலாம் – வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி பாராட்டு

Wasim Akram Ravi Shastri
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தியா கடுமையான போராட்டத்திற்கு பின் 48.5 ஓவரில் வரும் 266 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஏனெனில் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 66/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை நல்லவேளையாக மிடில் ஆர்டரில் இசான் கிசான் 82 ரன்களும் ஹர்திக் பாண்டியா 87 ரண்களும் அடித்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தூக்கி நிறுத்தினார்கள். முன்னதாக அப்போட்டியில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் லேசான காயத்தை சந்தித்து வெளியேறியதால் இஷான் கிசான் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

ஜாம்பவான்கள் பாராட்டு:
இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்தது முதல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்தது வரை பொதுவாகவே துவக்க வீரராக களமிறங்கி அசத்திய அவரால் மிடில் ஆர்டரில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவை அவமானத்திலிருந்து ஓரளவு காப்பாற்றிய அவருக்கு கேஎல் ராகுல் குணமடையும் பட்சத்தில் 2023 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிறந்த பவுலிங்கை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய இஷானுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்கலாம் என ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளனர். இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “இந்த இன்னிங்ஸ் இஷான் கிஷானுக்கு நம்மால் எந்த இடத்திலும் விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான 4வது இடத்தில் அசத்தும் அளவுக்கு அவர் சிறப்பாக விளையாடினார்”

- Advertisement -

“குறிப்பாக உலகிலேயே மிகச் சிறந்த பவுலியை கொண்ட அணிக்கு எதிராக அவர் மகத்தான சில ஷாட்களை விளையாடினார்” என்று கூறினார். இது பற்றி ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “ஒரு பேட்ஸ்மேனாக வலுவான அணிகளுக்கு எதிராக நாங்கள் அடிக்கவில்லை என்ற குறையுடன் நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களுக்கு எதிரணியை பற்றி நன்றாக தெரியும். அதில் ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி போன்ற சிறப்பான பவுலர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட டாப் 3 பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அவருடைய தன்னம்பிக்கையில் பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடியதாகும்”

இதையும் படிங்க: குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே ஜூனியரின் பெயரோடு தந்தையானதை அறிவித்த ஜஸ்ப்ரீத் பும்ரா – ரசிகர்கள் வாழ்த்து

“தற்போதைய இந்திய அணியில் வளைவுத்தன்மை தேவைப்படும் சூழ்நிலையில் இசான் கிசான் உலகக் கோப்பையில் தம்முடைய இடத்திற்காக போராடுகிறார். மேலும் வலுவான அணிகளுக்கு எதிராக வலது கை பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்க உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை. எனவே கேஎல் ராகுல் நல்ல வீரராக இருந்தாலும் இசான் கிசான் போன்ற வீரர்களுக்கான கதவை இந்தியா திறந்து வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement