குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே ஜூனியரின் பெயரோடு தந்தையானதை அறிவித்த ஜஸ்ப்ரீத் பும்ரா – ரசிகர்கள் வாழ்த்து

Angad
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கோவாவில் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசனை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் இன்று பெற்றோர்களாகவும் மாறியுள்ளனர்.

ஆம், செப்டம்பர் 4-ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை காலை ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அதை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா குழந்தையின் பெயரையும் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி சஞ்சனா கணேசனுடன் சேர்ந்து டேக் செய்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் : எங்களுடைய சிறிய குடும்பம் தற்போது வளர துவங்கியுள்ளது. நாங்கள் எப்பொழுதுமே நினைத்து பார்க்காத அளவிற்கு எங்களுடைய மனங்கள் நிறைந்துள்ளன. இன்று காலை எங்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அங்கத் ஜஸ்ப்ரீத் பும்ரா உலகிற்கு வந்துள்ளார். நாங்கள் இப்பொழுது சொல்ல முடியா மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என ரசிகர்களுடன் இந்த நற்செய்தியை பும்ரா பகிர்ந்துள்ளார். பும்ரா பகிர்ந்துள்ள இந்த பதிவில் குறிப்பிட்டபடி : அங்கத் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் ஜூனியர் பும்ராவின் பெயராகவும் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஓராண்டாகவே காயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருந்த பும்ரா அண்மையில் அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் கேப்டனாக அணிக்கு திரும்பி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றி இருந்தார். அதனை தற்போது ஆசிய கோப்பை தொடரிலும் இடம்பெற்று விளையாடி வரும் அவர் இன்று நடைபெற இருக்கும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்றாலும் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs NEP : நேபாள் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதோடு எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பை தொடரிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட உள்ளார். இந்நிலையில் பும்ராவிற்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு சமூக வலைதளம் மூலமாக தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement