IND vs NEP : நேபாள் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-NEP
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த தொடரில் இந்திய அணி தங்களது இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அதே அணி தான் இன்றைய போட்டியில் களமிறங்கும் என்றும் அதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக நாடு விரும்பியுள்ளதால் அவர் மட்டுமே இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறமாட்டார். அதே வேளையில் பும்ராவிற்கு பதிலாக மிகச் சிறப்பான ஃபார்மில் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் முன்னணி வீரர் முகமது ஷமி களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விழுந்தாலும் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே அதே முமென்ட்டத்துடன் இந்தியா இந்த போட்டிக்கும் செல்லும் என்பதனால் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி இன்றைய நேபாள் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவசர அவசரமாக பும்ரா மும்பைக்கு பறக்க காரணமே இதுதான். வெளியான தகவல் – எல்லாம் நல்ல செய்தி தான்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்,

Advertisement