அவசர அவசரமாக பும்ரா மும்பைக்கு பறக்க காரணமே இதுதான். வெளியான தகவல் – எல்லாம் நல்ல செய்தி தான்

Sanjana-Ganesan
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியது. ஆனால் அந்த போட்டி மழை காரணமாக தடைபட்டதால் இரு அணிகளுக்கும் தரா ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செப்டம்பர் 4-ஆம் தேதி இந்திய அணியானது நேபாள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விலகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா கொழும்புவில் இருந்து விமான மூலம் மும்பை சென்றடைந்ததாக கூறப்படுகிறது. இப்படி திடீரென இந்திய அணியில் இருந்து விலகிய பும்ரா மும்பை பயணித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும், பிரபல தொகுப்பாளராக பணியாற்றிய சஞ்சனா கணேசனும் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் குழந்தை எப்போது வேண்டுமென்றாலும் பிறக்கலாம் என்பதனால் தனது முதல் குழந்தை பிறப்பின் போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் குழந்தை பிறந்த பின்பு உடனடியாக அவர் இலங்கை சென்று இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுகிறது.

இதையும் படிங்க : BAN vs AFG : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெளிநாட்டு மண்ணில் சாதனை வெற்றி – இலங்கைக்கு சிக்கலை உண்டாக்கிய வங்கதேசம்

இந்திய அணி இன்னும் ஒரு மாதத்தில் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரானது முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் பும்ரா தந்தையாக போகிறார் என்கிற நற்செய்தி வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement