என் தம்பியவா முறைக்கிறா? இஷான் கிஷானை மிரட்டிய ஹரிஷ் ரவூஃபுக்கு – 4, 4, 4.. பேட்டிங்கில் மாஸ் பதிலடி கொடுத்த பாண்டியா

Haris Rauf Hardik Pandya.jpeg
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் கருதப்படும் இவ்விரு அணிகள் மோதிய இப்போட்டிக்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் கடைசியில் மழை வந்து மொத்தமாக ரத்து செய்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவர்களில் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக இஷான் கிசான் 82 (81) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 (90) ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 266 ரன்களை பாகிஸ்தான் துரத்த விடாமல் மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 66/4 என இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

தம்பிய முறைச்சதுக்கு பதிலடி:
அப்போது நங்கூரமாக நின்று விளையாடிய இசான் கிசான் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு மொத்தமாக 9 பவுண்டரி 2 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றினார். குறிப்பாக பொதுவாக டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் இப்போட்டியில் ராகுல் விளையாடும் மிடில் ஆர்டரில் சூழ்நிலைக்கேற்றார் போல் மிகச் சிறப்பாக விளையாடி சில சாதனைகளையும் படைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.

ஆனால் 38வது ஓவரை வீசிய ஹரிஷ் ரவூப் 3வது பந்தில் அவரை அவுட்டாக்கிய போது மிகுந்த கோபத்துடன் “பாஹர் ஜவோ அதாவது வெளியே போ” என்று சொல்லிக்கொண்டே சுட்டு விரலை நீட்டியவாறு ஸ்லெட்ஜிங் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார். குறிப்பாக 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்துப் பெரிய தொல்லை கொடுத்ததால் அவர் இஷான் கிசானை அவர் கோபத்துடன் வழி அனுப்பி வைத்தார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதை எதிர்ப்புறமிருந்து கவனித்த ஹர்திக் பாண்டியா ஹரிஷ் ரவூப் வீசிய அதற்கடுத்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 4வது பந்திலும் பவுண்டரியை விளாசி தக்க பதிலடி கொடுத்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது தம்முடைய தம்பியை போல் பழகிய இஷான் கிசான் எப்படி குறைக்கலாம் என்ற வகையில் ஹரிஷ் ரவூப்க்கு அவர் கொடுத்த பதிலடி அபாரமாக இருந்தது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: ரத்தான பாகிஸ்தான் போட்டி. அடுத்த போட்டியிலும் காத்திருக்கும் மழை – இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற என்ன வழி?

அந்த வகையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த பாண்டியாவும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 87 (90) ரன்களில் அவுட்டானாலும் இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய பெருமையுடன் பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து அடுத்த லீக் போட்டியில் நேபாளை எதிர்கொள்ளும் இந்தியா அதில் நிச்சயம் வென்றால் தான் சூப்பர் 4 சுற்று தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் 1 புள்ளியைப் பெற்று இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement